Published:Updated:

தத்தெடுத்த கிராமங்களுக்கு இலவச வை–பை வசதி: கனிமொழி அதிரடி!

விகடன் விமர்சனக்குழு
தத்தெடுத்த கிராமங்களுக்கு இலவச வை–பை வசதி: கனிமொழி அதிரடி!
தத்தெடுத்த கிராமங்களுக்கு இலவச வை–பை வசதி: கனிமொழி அதிரடி!

சென்னை: தான் தத்தெடுத்த இரு கிராமங்களிலும் இலவசமாக வை–பை வசதியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஏற்படுத்த உள்ளார்.
 

தத்தெடுத்த கிராமங்களுக்கு இலவச வை–பை வசதி: கனிமொழி அதிரடி!

தி.மு.க. மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. குழுத்தலைவருமான கனிமொழி, கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் கிராமத்தை தத்தெடுத்தார். இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார். இந்த இரு கிராமங்களிலும், கனிமொழி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தேசியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவத்சவாவுக்கு, கனிமொழி எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம், திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் ஆகிய கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் இணைய வை–பை வசதி ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொள்கிறேன். இந்த இரு கிராமங்களிலும் வை–பை கட்டமைப்பு ஏற்படுத்தும் செலவுத்தொகையை எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து கனிமொழி தத்தெடுத்த மேற்குறிப்பிட்ட இரு கிராமப் பகுதிகளிலும் விரைவில் இலவச வை–பை வசதி வர இருக்கிறது.

மேற்கண்ட தகவல் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.