Published:Updated:

இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்

இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்
இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்

ராமநாதபுரம்: இனி எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் மக்களை தேடி வந்துதான் தீர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது பயணத்தை துவங்கினார்.

இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்

பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரத்தில் நெசவாளர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பரமக்குடியில் மிளகாய் விவசாயிகளை சந்தித்தார். பின்னர் பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முதுகுளத்தூர் சென்ற ஸ்டாலின் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்களிடம் உரையாற்றினார். பின்னர் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்

பகல் 1 மணியளவில் ராமநாதபுரம் சட்ட பேரவைக்கு உட்பட்ட பாம்பன் தெற்குவாடி கடற்கரைக்கு சென்று மீனவர்களிடம் உரையாடினார். அப்போது மீனவர்கள், அரசால் தங்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலின் அளவை கூடுதலாக வழங்க உதவுமாறும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளின் இயற்கை வளங்கள் அழியாதவாறு பாதுகாப்புடன் பாசி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை வனத்துறையினர் தடுப்பதாக மீனவ மகளிர் அமைப்பினரை சேர்ந்தவரும் ‘சீகல்’ விருது பெற்றவருமான லட்சுமி புகார் தெரிவித்தார். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார் ஸ்டாலின்.

இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்

பின்னர் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த ஸ்டாலினிடம் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் ஆட்டோகிராப் வாங்கியதுடன், ஸ்டாலினுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டனர். தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள பிராமண சமூகத்தினரை சந்திக்க சென்ற ஸ்டாலினுக்கு அங்கு வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தி.மு.க ஆட்சியின் போது துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முடங்கி கிடப்பது குறித்தும், பாதுகாப்பு என்ற பெயரில் ராமேஸ்வரம் கோயிலின் 4 ரதவீதிகளிலும் வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்திருப்பதால் உள்ளூர் மக்களுக்கும், வெளியூர் யாத்திரை வாசிகளுக்கும் ஏற்படும் இடையூறுகள் குறித்தும், திருக்கோயிலில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறையை களைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன் அங்கு உடை மாற்றும் இடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்

இதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின் ‘‘எனது பள்ளிபருவ நண்பர்களுடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து அதன் அழகினை ரசித்து இருக்கிறேன். இப்போது அக்கோயிலில் பணியாற்றும் நீங்கள் என்னை அழைத்து சந்தித்தன் மூலம் என்னை பெருமை பட வைத்துள்ளீர்கள். இப்போதைய ஆட்சியாளர்களை எளிதில் சந்திக்க முடிவதில்லை என சொன்னீர்கள். இனி எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் மக்களை தேடி வந்துதான் தீர வேண்டும். மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், ஏழைகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வருகிறேன். நான் அரசியல் பேசுவதற்காக வரவில்லை. உங்களின் குறைகளை தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்.

தி.மு.க.வின் ஆட்சியில்தான் ஓடாத திருவாரூர் தேர் ஓடியது. கோயில் நிர்வாகம் செம்மையாக இயங்க உயர்மட்ட குழு அமைக்கப்ப்பட்டது. 20 ஆண்டுகள் பணியாற்றிய கோயில் ஊழியர்களுக்கு பென்சன் வழங்கப்பட்டது. இங்கு பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்தான். இதைவிட கூடுதலாக செய்திருக்க வேண்டிய தற்போதைய ஆட்சியாளர்கள், கடந்த நான்கரை ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றனர். இதனை போக்க தி.மு.க ஆட்சி மலர வேண்டும். தி.மு.க ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை எங்களை விட உங்களிடம்தான் அதிகம் உள்ளது. அந்த நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும். அப்போது உங்கள் கோரிக்கைகளும் நிறைவேறும்’’ என்றார்.

இனி அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும்: ஸ்டாலின்

பின்னர் ராமேஸ்வரம் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம் ராமேஸ்வரத்தில் அரசு கலை கல்லூரி துவக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் ‘‘தி.மு.க ஆட்சியின் போதுதான் ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இன்றுவரை அது செயலாக்கப்படவில்லை. உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

தொடர்ந்து அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின் கலாமின் சகோதரர் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

முன்னதாக, ராமேஸ்வரம் வந்திருந்த ஸ்டாலினின் மனைவி துர்க்கா ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

-இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி