Published:Updated:

மண்ணுளி முதல் ஈமு வரை! (மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 11)

'அட எவ்வளவு அடிச்சாளும் தாங்காறானே... இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டான்மா'னு என சினிமாவில் வடிவேலு வசனம் பேசுவாரே. அது அப்படியே கொங்கு மண்டல மக்களுக்கு பொருந்தும். எத்தனை முறை ஏமாற்றினாலும், சளைக்காமல் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். மோசடிகள் எல்லா பகுதிகளிலும் நடக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் நடக்காதே மோசடிகளே இல்லை எனும் அளவுக்கு, அத்தனை மோசடிகளின் துவக்கம் கொங்கு மண்டலம் தான். இங்கு நடந்த பல மோசடிகள் கொங்கு மண்டலத்தை தாண்டி வேறு பகுதிகளில் கேட்டால் அவர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள் அல்லது செய்திகளில் படித்திருப்பார்கள் அவ்வளவு தான். அந்தளவுக்கு கொங்கு பூமி ஒரு வகையில் ஏமாறும் பூமியாக இருந்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் எப்படி இத்தனை மோசடிகள் அரங்கேறின என்று தானே கேட்கிறீர்கள். அதைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

மண்ணுளி முதல் ஈமு வரை! (மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 11)

கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன்?

இந்த தொடரில் கடந்த 10 வாரங்களாக நாம் பார்த்த மோசடிகள் எல்லாமே கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களை குறிவைத்து நடைபெற்ற மோசடிகள். இந்த மோசடிகளில் சுருட்டப்பட்டவை கொஞ்ச நஞ்சமல்ல, பல ஆயிரம் கோடி ரூபாய்கள். ஒவ்வொன்றும் மோசடி என தெரியத்துவங்கும் போது செய்திகளில் பரபரக்கும். அதைப்பார்த்து இப்படி எல்லாமா ஏமாத்துவாங்க... இப்படி எல்லாமா ஏமாறுவாங்க... என மக்களை புலம்ப வைக்கும். சில நாட்கள் மிக பரபரப்பாக பேசப்படும் செய்தி, அடுத்த சில தினங்களிலே மறக்கப்பட்டு விடும். அதன் பின்னர் அடுத்த மோசடி. அதுவும் மறக்கடிக்கப்பட்டு அடுத்த மோசடி. இப்படி நடந்தவை தான் இத்தனை மோசடிகளும்.

மண்ணுளி முதல் ஈமு வரை! (மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 11)

கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன்? இதற்கு ஒற்றை காரணம் மட்டும் இல்லை. பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது பணப்புழக்கம். தொழில் ரீதியாக வளர்ந்த நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சங்ககிரி, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பணப்புழக்கம் அதிகம். இதுதான் மோசடி நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. கவர்ச்சியான விளம்பரம், நடிகர், நடிகையர்களின் வருகை போன்றவை முதலீட்டாளர்களை சுண்டி இழுக்கின்றன. இதுவே ஏமாறுபவர்களுக்கு சாதகமான அம்சங்களாக போய்விடுகிறது.

மக்களின் மென்மையான போக்கும் காரணம்

இரண்டாவது காரணம் இந்த பகுதி மக்களின் மென்மையான தன்மை. கொங்கு மண்டலம் தவிர மற்ற பகுதியில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து விட்டால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகித்து விடலாம். அந்த நிதி நிறுவனம் அடித்து உடைக்கப்படும். ஆனால், இங்கே நிதி நிறுவனம் நடத்தி மோசடி நடந்தாலும், புகார் கொடுக்க கூட பலர் முன்வரமாட்டார்கள். திருப்பூரில் பாசி நிதி நிறுவனம் மற்றும் கோயமுத்தூரில் பைன் பியூச்சர் ஆன்லைன் நிதி நிறுவன மோசடியில், மோசடி செய்யப்பட்ட தொகை சில ஆயிரம் கோடிகள். ஆனால், பணத்தை இழந்தவர்கள் எவ்வித போராட்டமும் நடத்தவில்லை. போராட்டம் நடத்தியவர்கள், பணத்தை திரும்ப கொடு என கேட்டவர்கள் முதலீட்டாளர்கள் அல்ல. ஏஜெண்டுகள் மட்டுமே. இதுவே இங்கு மோசடிகள் தொடர முக்கிய காரணமாக அமைந்து விட்டது. நாம் முதலில் குறிப்பிட்டதுபோல, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா' என்ற சினிமா வசனத்துக்கு ஏற்ப இந்த பகுதி மக்கள் இருந்தது தான் காரணம்.

மண்ணுளி முதல் ஈமு வரை! (மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 11)

இந்தப் பகுதி மக்கள் மென்மையானவர்கள் என்பதால், யார் மீதாவது நம்பிக்கை வைத்தால் அவர்களை அப்படியே நம்பிவிடுகிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னரும் கூட வன்முறையை அவ்வளவு ஏன், அதிரடி முடிவுகளை கூட எடுக்கமாட்டார்கள். இவர்களின் மென்மையான போக்கு தான் இந்த மோசடிகள் தொடர முக்கிய காரணம்.

வேளாண் தொழில் வீழ்ச்சியும் கூட...

மூன்றாவது காரணம் வேளாண் தொழில் வீழ்ச்சி. கொங்கு மண்டலம் விளைநிலங்கள் நிறைந்த மாவட்டம். போதிய மழையின்மை, விளை பொருட்களுக்கு விலை கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் வேளாண் தொழில் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் விவசாயத்தை தொடர முடியாமல் போன விவசாயிகள், பொருளீட்ட வேறு வழியில்லாமல் சேமிப்பு பணத்தை இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இன்னும் சிலர் விளை நிலங்களை விற்று இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்ததும் உண்டு.

மண்ணுளி முதல் ஈமு வரை! (மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 11)

விவசாயம் பொய்த்துபோனது வேறு ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க மாட்டோமா என நினைத்தவர்கள் தான் இது போன்ற மோசடிகளில் முதலீடு செய்தார்கள். அப்படி நடந்தது தான் ஈமு மோசடி, நாட்டுக்கோழி மோசடி, தேக்கு மர வளர்ப்பு மோசடி போன்றவை. விவசாயம் அழிந்து வரும் நிலையில், வேறு வழியில்லாமல் தான் விவசாயிகள் இதை நோக்கி சென்றனர். விவசாயிகள் செய்த தவறு, ஒரு பக்கம் பணத்தை இழந்த பின்னரும், மீண்டும் அதேபோன்ற மோசடியில் சிக்கியது தான்.

மக்களின் குற்ற மனப்பாங்கும் காரணம்

என்னதான் மோசடிகள் தொடர்வதற்கு பல காரணங்களை சொன்னாலும், மக்களிடம் குற்ற மனப்பாங்கு அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணம். குற்றச் செயல்களை விட குற்ற மனப்பாங்கு தான் பெரும் தீங்கு எனச்சொல்லப்படுவதும் உண்டு. அதன்படி அதிக லாபத்தை எதிர்பார்த்து, முதலீடு செய்து, அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறாத போது அவர்களை எப்படி பாதிக்கப்பட்டவர்கள் என சொல்ல முடியும் என்பதும் ஒரு தரப்பு வாதமாக இருக்கிறது. குற்றவியல் தத்துவங்களின் அடிப்படையில் இதுவும் ஒரு குற்றம் தான்.

மண்ணுளி முதல் ஈமு வரை! (மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 11)

ஒரு நிறுவனம் துவங்கப்படும் போது எதைப்பற்றியும் ஆராயாமல் அங்கு பணத்தை கொட்டி விட்டு, பின்னால் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என புலம்புவதில் எந்த அர்த்தமுமில்லை. உழைக்காமல், குறுகிய காலத்தில் பணம் சேர்க்கும் எண்ணமே இதுபோன்ற மோசடி நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்பாக அமைகிறது. இன்றைய உலகமயமாதல் பொருளாதார சூழலில், கொள்ளை லாபம் என்பது மட்டுமே வாழ்வின் லட்சியமானது தான் மக்களிடம் இது போன்ற மனப்பாங்கு உருவாக காரணம். என்ன செய்தாவது பொருளீட்டும் ஆர்வத்தில் இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் தான் இன்று பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

ஏமாறுவதற்கான வாய்ப்பை புறக்கணியுங்கள்

'நான் எங்கே ஏமாற்றினேன். ஏமாற ஒரு வாய்ப்பை கொடுத்தேன்' என சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இவ்வாறு மோசடி நிறுவனங்கள் வாய்ப்பை மட்டுமே கொடுத்தது. அந்த வாய்ப்பை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டதும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் பெருக முக்கிய காரணம்.

இந்த தொடர் இத்தோடு முடிந்து விட்டது. ஆனால் இந்த மோசடிகள் முடிந்து விடும் என சொல்வதற்கில்லை. அது நம் ஒவ்வொருவரின் கையில் தான் இருக்கிறது. நம்மை எல்லாம் ஏமாற்ற, ஏராளமான வாய்ப்புகளுடன், விதவிதமான ஐடியாக்களுடன் மோசடி நிறுவனங்கள் காத்திருக்கின்றன. அந்த வாய்ப்பை புறந்தள்ளுவது ஒன்று தான் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி. இல்லாவிட்டால் சதுரங்க வேட்டை மோசடிகள் இடைவிடாது தொடரும்.

ச.ஜெ.ரவி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு