Published:Updated:

நிதிஷ் குமார் அகந்தை பிடித்தவர், ஓட்டு கேட்கவே உரிமை இல்லாதவர்: மோடி கடும் தாக்கு!

நிதிஷ் குமார் அகந்தை பிடித்தவர், ஓட்டு கேட்கவே உரிமை இல்லாதவர்: மோடி கடும் தாக்கு!
நிதிஷ் குமார் அகந்தை பிடித்தவர், ஓட்டு கேட்கவே உரிமை இல்லாதவர்: மோடி கடும் தாக்கு!

பங்கா: பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமாரை அகந்தை பிடித்தவர், ஓட்டு கேட்கவே உரிமை இல்லாதவர் என்று பெயர் குறிப்பிடாமல் கடுமையாக குற்றஞ்சாட்டி பேசினார்.

நிதிஷ் குமார் அகந்தை பிடித்தவர், ஓட்டு கேட்கவே உரிமை இல்லாதவர்: மோடி கடும் தாக்கு!

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, பங்கா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, ''பீகார் மாநிலத்துக்கு நான் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி விசேஷ நிதிஉதவி அறிவித்தேன். உடனே சிலர் அந்த நிதி வருமா? வராதா? என்று சந்தேகம் எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இப்போதைய அரசிடம் நான் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட அது உங்களுக்கு வந்து சேருமா?

நான் பணம் கொடுத்தால், இங்கு ஆட்சியில் இருப்பவர் (முதல்வர் நிதிஷ் குமார்), அதை திருப்பி அனுப்பும் அளவுக்கு அகந்தை பிடித்தவர். எனவே, நான் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி கொடுத்தால், அது மோடி கொடுத்த பணம் என்பதால் தேவையில்லை என்று அறிவித்து விடுவாரோ என்று கவலைப்படுகிறேன். அவரை என்னால் நம்ப முடியாது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, பீகார் வெள்ள நிவாரணத்துக்காக கொடுத்த ரூ.5 கோடியை திருப்பி அனுப்பியவராயிற்றே.

இங்கே அமர்ந்துள்ள முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியை அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார். எனவே, அவரை மஞ்சியால் நம்ப முடியுமா? மஞ்சிக்கு செய்த காரியத்தை பார்த்த பிறகு, அவரை யாருமே நம்ப முடியாது. பீகார் மக்களும் நம்ப முடியாது. பீகாரில், மின்தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு எப்படி ஆட்சி நடக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் ஓட்டு கேட்கவே உரிமை இல்லாதவர்.

நான் பீகாருக்கு விசேஷ சலுகை காண்பிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. டெல்லியில் உள்ள அரசு, யாருக்கும் விசேஷ சலுகை காட்டவில்லை. இது பீகார் மக்களின் உரிமை. அதை நான் கொடுக்கிறேன். இது, மோடியின் பணம் அல்ல, பீகார் மக்களுக்கு சொந்தமான பணம். பீகார் மாநிலம் போலித்தனம், முதலாளித்துவம், பிரிவினைவாதம், பரம்பரை அரசியல் என எல்லாவற்றையும் பார்த்துள்ளது.

இந்த தடவை வளர்ச்சிக்கு வாக்களியுங்கள். இளைஞர்கள் பெருமளவு திரண்டு வந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பீகார் வளர்ந்தால்தான், நாடும் வளரும். வர்த்தகம் செய்ய எளிதான மாநிலங்கள் என உலக வங்கி வெளியிட்ட பட்டியலில், பீகார் மாநிலம் 27வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. ஆளும் ஜார்கண்ட் மாநிலமோ 29வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

பீகார் மாநில இளைஞர்கள், பெற்றோரை தனியாக விட்டுவிட்டு வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள். அவர்களின் வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வுகாண எங்களுக்கு வாக்களியுங்கள். எனது அரசு, பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது. ஏழைகளுக்காக ‘ஜன்தன் யோஜனா’, அனைவருக்கும் வீடு, முத்ரா வங்கி, செல்வமகள் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

மாவோயிஸ்டுகள் வன்முறை பாதையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டிய நேரம் இதுவாகும். துப்பாக்கி தோட்டாக்களால் எந்த பிரச்னைக்கும் தீர்வுகாண முடியாது. ஓட்டுச்சீட்டின் மீது நம்பிக்கை வையுங்கள். துப்பாக்கி தோட்டா, அழிவைத்தான் தரும். ஓட்டுச்சீட்டோ, வளர்ச்சியை தரும்." என்றார்.