Published:Updated:

காந்தியை கொன்றது யார்?: லாலுவின் 'ட்விட்'டால் புதிய சர்ச்சை!

விகடன் விமர்சனக்குழு
காந்தியை கொன்றது யார்?: லாலுவின் 'ட்விட்'டால் புதிய சர்ச்சை!
காந்தியை கொன்றது யார்?: லாலுவின் 'ட்விட்'டால் புதிய சர்ச்சை!

பாட்னா: மகாத்மா காந்தியை படுகொலை செய்தது யார் என்ற ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

காந்தியை கொன்றது யார்?: லாலுவின் 'ட்விட்'டால் புதிய சர்ச்சை!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தி உள்ளார். அதில், வினா-விடை பாணியில் காந்தியை கொன்றது யார்? என்றொரு கேள்வியை எழுப்பியுள்ள லாலு, தனது வழக்கமான 'லொள்ளு பாணியில்' பதிலும் அளித்துள்ளார்.

மேலும் அதில், கோட்சேவை வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ்.; ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் நடப்பது யார்? பா.ஜ.க.; பா.ஜ.க.வை இயக்குவது யார்? மோடி; அப்படியானால், காந்தியை கொன்ற கொலையாளி யார்...? என்று குசும்புத்தனமாக ஒரு கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக சாடும் லாலுவின் இந்த ட்விட் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.