Published:Updated:

மது அடிமைகளுக்கு மறுவாழ்வு: முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு அவ்வையார் விருது!

சென்னை: மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளித்துவரும்  முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு இந்த ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்பட்டது.

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண் ஒருவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு அவ்வையார் விருது வழங்கிவருகிறது.

இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள  தங்கப்பதக்கம்,  சான்றிதழ்  வழங்கப்படும். அதன்படி 2015-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு முனைவர் சாந்தி ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாந்தி ரங்கநாதன் சமூக சேவை நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். குடிபோதை மீள் சிகிச்சை பற்றிய முனைவர் பட்டமும், குடிபோதை மீள்  சிகிச்சை ஆலோசகருக்கான உலக அளவில் அங்கீகார சான்றிதழும் பெற்றுள்ள அவர், சிறந்த சமூக சேவைக்காக 1992-ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ விருதும், 1999-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வியன்னா சிவில் சமூக விருதும் பெற்றவர்.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கடந்த 33 ஆண்டுகளாக மறுவாழ்வு அளிக்கும் சேவையினை ஆற்றி வரும் அவரின் சிறந்த சமூக சேவையினை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா விருது மற்றும் சான்றிதழினை சாந்தி ரங்கநாதனுக்கு வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு