Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!
அணு ஆட்டம்!

வரும்முன்னர் காப்பவன்தான் அறிவாளி

புயல் வந்த பின் காப்பவன் முழு மூடன்

- யாரோ 

கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்கள் சத்ராஸ் எனும் நகரியத்தில் வாழ்வதுபோல, கூடங்குளம்

##~##
ஊழியர்கள் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் வசிப்பது​போல, செர்னோபில் அணு மின் நிலைய ஊழியர்கள் 3 கி.மீ. தூரத்தில் பிரிபியட் எனும் நகரியத்தில் வாழ்ந்தனர். (எனக்கு ஒரு சந்தேகம்... அணு மின் நிலையங்களில் எந்தவித ஆபத்தும் இல்லை என்றால், ஊழியர்களை ஏன் உலைகளுக்கு அருகே வசிக்கவிடுவது இல்லை. ரயில்வே ஊழியர்கள், ரயில் நிலையங்களுக்கு அருகேயும், காவல் துறை அதிகாரிகள் காவல் நிலையங்களுக்கு அருகேயும்தானே வாழ்கிறார்கள்?)

சுமார் 50,000 மக்கள் வாழ்ந்த பிரிபியட் நகரியத்தில் ஹன்னா சோஸ்லோவா என்ற பெண் தனது கணவரு​டனும், குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தார். கணவர், செர்னோபில் அணு மின் நிலையத்தில் பொறியாளராக வேலை பார்த்தார். சோவியத் தேசியவாதியான ஹன்னா, கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளில் சிரத்தையோடு பணியாற்றி வந்தார்.

1986 ஏப்ரல் 25-ம் நாள் ஒரு கட்சிக் கூட்டத்துக்குப் போய்விட்டுக் களைப்புடன் வீடு திரும்பிய ஹன்னா, சீக்கிரமாகவே தூங்கச் சென்றுவிட்டார். சற்று நேரத்​தில் ஒரு பெரிய வெடி சப்தம் கேட்கவே துள்ளி எழுந்து வெளியே போய்ப் பார்த்தார். சோவியத் ரஷ்யா​வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் எதுவும் துவங்கிவிட்டதா என்ற ஐயத்தோடு வெளியேவந்தார் ஹன்னா. ஆனால் அது ஓர்

அணு ஆட்டம்!

அழகான நிலவொளி ததும்பும் இரவாகவே இருந்தது. ராணுவ முகாமில் ஏதாவது வெடித்து இருக்கும் என்று எண்ணியவாறே மீண்டும் தூங்கச் சென்றார்.

அடுத்த நாள் காலை, கணவர் வழக்கமாக வேலைக்​குச் சென்றார். நான்கரை வயது மகன் விக்டருடன் ஹன்னா, தனது காய்கறித் தோட்டத்துக்குச் சென்றார். ஆனால் வழியில் சந்தித்த அறிமுகம் அற்ற ஒரு நபர் ஹன்னாவையும், பையனையும் திரும்பிச் சென்று வீட்டுக்குள் பதுங்கி இருக்குமாறு அறிவுரைத்தார். அந்த எச்சரிக்கையைப் புறந்தள்ளி போய்க்கொண்டு இருந்த ஹன்னா, முகமூடி அணிந்த ஆண்கள் தெருக்களைக் கழுவிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார். அவரது நாக்கில் ஒரு வித உலோகச் சுவையினையும் உணர்ந்தார். இனம் புரியாத பயம் இதயத்தைக் கவ்விக்கொள்ள, வேகமாகத் திரும்பி தனது ஒன்பதாவது மாடி வீட்டுக்குள் போனால்... செர்னோபில் அணு மின் நிலையம் எரிந்துகொண்டு இருந்தது தெரிந்தது. அவசரமாகப் பதைபதைத்து கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். குழந்தைகளை உடனடியாக சற்று தூரத்தில் வசித்த தனது சகோதரன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

ஹன்னாவும், குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கடும் கதிர்வீச்சுக்கு உள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹன்னா மயக்க நிலையில் கிடக்க, அவர் கணவர் வயிற்றுப்​போக்கால் அவதியுற்று அங்கே வந்து சேர்ந்தார். குழந்தை விக்டரின் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனே அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும், முடிவு தங்கள் கைகளில் இல்லை என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அந்தப் பச்சிளங் குழந்தை​யின் தைராய்டு சுரப்பி முற்றிலுமாக வெட்டி எடுக்கப்​பட்டது. குரல் வளையில் குறைபாடு ஏற்பட்டதால், விக்டர் தனது குரலை இழந்தான்.

'எங்களுக்கு எந்த துன்பம் வந்தாலும் பரவாயில்லை; எங்கள் குழந்தையைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினார்கள் அந்தப் பெற்றோர். விக்டருக்கு உடனடியாக அயோடின் மாத்திரைகள் கொடுக்க வேண்டும் என்றனர் மருத்துவர்கள். அந்த மருந்துக்கு எங்கே போவது? அருகே உள்ள ஒரு நகரில்

அணு ஆட்டம்!

சர்வதேச மருத்துவ மாநாடு நடப்பதாக அறிந்த ஹன்னா, அங்கே சென்று அந்த வெளிநாட்டு மருத்துவர்களிடம் மன்றாடி, தன் மகனுக்கு அயோடின் மாத்திரைகள் அனுப்பித் தரக் கெஞ்சலாம் எனத் திட்டமிட்டார். அவர்களும் குழந்தைகள் பெற்றவர்கள்தானே? ஆனால் 'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்று சொல்வதுபோல, அந்த மாநாடு முடிந்துவிட்டிருந்தது.

அழுது புரண்டு அவரது உயிர் அணைந்துவிடும் என்ற நிலைக்கு வந்தபோது, ஒரு பெண் ஹன்னா​வுக்கு அறிவுரைத்தார். 'உனது மகன் பிழைக்க வேண்டுமானால், நீ வாழ்ந்தே ஆக வேண்டும்’ என்று சொன்னார். விக்டருக்கு இரண்டாவது அறுவைச் சிகிச்சை செய்ய ஆயத்தம் செய்தபோது, ஒரு பிரெஞ்சு நிறுவனத்தின் உதவி கிடைத்தது. விக்டரை மட்டும் பிரான்சுக்கு அழைத்துச் சென்று, மருத்துவம் செய்து, மீட்டுத் தந்தது அந்த நிறுவனம். மறுபிறவி எடுத்து வந்த தம் ஆசை மகனை அள்ளி எடுத்து அணைத்துக்கொள்ள விமான நிலையத்தில் காத்துக் கிடந்தனர் ஹன்னாவும் கணவரும். ஒருநாள் நள்ளிர​வில் வந்து சேர்ந்தான் அந்தப் பச்சைக் குழந்தை. மற்ற குழந்தைகளுக்கும் மருந்து எடுத்து வந்தவனைக் கட்டிப்பிடித்து அழுதார்கள்.

உரிய தகவல்களும், உற்ற மருந்துகளும் தருவதற்குத் தவறிய சோவியத் அரசுக்கு எதிராகப் படை திரட்டினார் ஹன்னா. 'செர்னோபில் அணுவால் சிதைக்கப்பட்டோர் இயக்கம்’ துவங்கிற்று!

'செர்னோபில் - 20 ஆண்டுகளும், 20 ஆளுமை​களும்’ எனும் ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சரிதத்தைவிட சங்கடமான பல துயரங்களை, நான் படித்து இருக்கிறேன். இரும்புத் திரைக்குப் பின்னே இறுமாப்புடன் நின்ற சோவியத் அரசு முதலில் செர்னோபில் விபத்தை 'சோற்றுக்குள் முழுப் பூசணி’ கதைபோல மறைக்க முயன்றது. முடியாமல் போகவே மழுப்பி நின்றது, மீசையில் மண் ஒட்டவில்லை என!

தமிழகத்தின் தென் பகுதியான கூடங்குளத்தில் நிறுவப்படுகின்ற அணு உலையும், செர்னோபில் அணு உலையும் ஒரே ரகத்தைச் சார்ந்தவை. ரஷ்யத் தொழில்நுட்பம் பற்றியும், அணு உலைகளின் தர்க்கங்​கள், அமைப்புகள் பற்றியெல்லாம் பல வல்லுநர்கள் சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.

அந்த விபத்தில் 28 பேர் உயிர் இழந்தனர். 203 பேர் உடனடியாகப் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு கணக்கு சொல்கிறது. இன்னோர் அரசு மதிப்பீடு, இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கிறது. விபத்து நடந்தபோது

அணு ஆட்டம்!

பணியாற்றிய அவசரப் பிரிவு ஊழியர்​கள் 2,00,000 பேர், விபத்துப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 1,16,000 மக்கள் மற்றும் சுற்று வட்டாரங்களில் வாழ்ந்த 2,70,000 பேர் என சுமார் ஆறு லட்சம் மக்களில், இதுவரை 4,000 பேர் புற்று​நோய்களால் இறந்துவிட்டனர் என்கிறது அந்தப் புள்ளி விவரம்!

ரஷ்யா, பெலரூஸ் நாடுகளைச் சார்ந்த மூன்று புகழ் பெற்ற அறிஞர்கள், அலக்ஸி யாப்லகோவ், வாசிலி நெஸ்தநெங்கோ, அலக்ஸி நெஸ்தரெங்கோ ஆகியோர் சென்ற வருடம் ஒரு புத்தகம் வெளியிட்டனர். 'செர்னோபில் - மனித, சுற்றுச்சூழல் பேரிடரின் விளைவுகள்'' (சிலீமீக்ஷீஸீஷீதீஹ்றீ: சிஷீஸீsமீஹீuமீஸீநீமீs ஷீயீ tலீமீ சிணீtணீstக்ஷீஷீஜீலீமீ யீஷீக்ஷீ றிமீஷீஜீறீமீ ணீஸீபீ tலீமீ ணிஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீt) எனும் புத்தகத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் செர்னோபில் கதிர்வீச்சினால் பாதிக்கப்​பட்டு இறந்ததாகத் தெரிவிக்கின்றனர். சுமார் 780 மில்லியன் மக்கள் கதிர்வீச்சினால் பாதிப்பு அடைந்து இருக்கலாம் என்றும், எண்ணிலடங்காத மிருகங்களும், பறவைகளும், மீன்களும், செடி கொடிகளும், மரங்களும், நோய்க் கிருமிகளும்கூட கதிர் வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிலமும், நீரும் கணிசமான கதிர்வீச்சுடன் இருப்பதால், இன்னும் நீண்ட நெடுங்காலத்துக்கு நாம் பாதிப்புக்கு உள்ளா​வோம் என்றும் மேற்கண்ட புத்தகம் வாதிடு​கிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட 'செர்னோபிலின் நல்வாழ்வுத் தாக்கங்கள்’ எனும் 'அணு ஆயுத உபாதையைத் தடுக்கும் சர்வதேச மருத்துவர்கள்’ அமைப்பின் அறிக்கை வாதிடுவதுபோல, நீண்ட கால அடிப்படையில் பரந்துபட்ட ஆய்வு ஒன்றினை நடத்துவது இயலாத விஷயம். தைராய்டு, மார்பக, மூளைப் புற்று நோய்களும், புற்று நோய் சாராத மூளைக் கோளாறுகள், மனப் பிரச்னைகள், இளமையில் முதுமை போன்ற இடர்களும், மரபணுத் தொடர்பான குழந்தையின்மை, இறந்து பிறத்தல், அங்கஹீனங்கள் உள்ளிட்ட பிரச்னைகளும் விரவிக்கிடக்கின்றன. இவை இன்னும் மோசமாகலாம் என்று அந்த அறிக்கை வாதிடுகிறது.

ஜப்பானில் நடந்துகொண்டு இருக்கும் புகுஷிமா விபத்து, செர்னோபில் விபத்தைவிட மோசமானது என்று வர்ணிக்கப்படுகிறது. நேற்று... செர்னோபில், இன்று... புகுஷிமா, நாளை..?

ஜார்ஜ் கோமஸ்

அணு ஆட்டம்!

வயது ஏற ஏற பெரும்பாலோர் பழமைவாதிகளாக மாறுவார்கள். ஆனால், தூத்துக்குடி மாவட்டம் குன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த 86 வயதுப் பெரியவர் ஜார்ஜ் கோமஸ், பெரும் புரட்சிப் பழமாகிவிட்டார். 1942-ம் வருடம் தனது 15-வது வயதிலேயே இந்திய விடுதலைக்காக மாணவர் இயக்கத்தில் சேர்ந்தவர். 1950 முதல் துறைமுகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, துறைமுகங்கள் தனியார்​மயமாவதை எதிர்த்தவர். இலங்கைக்குச் சென்று, தெற்காசிய அளவில் சோஷலிசக் கட்சியின் கொள்கைகளைப் பரவச் செய்து, இன்றளவும் ஒரு மாற்று இடதுசாரி அமைப்பு தோன்ற ஓடியாடி உழைப்பவர். அமைப்பு சாராத் தொழி​லாளர் நலனுக்காகப் பாடுபடும் ஜார்ஜ் கோமஸ், அணு சக்தியியலும், அணு ஆயுதங்களும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் எனக்கொண்டு, இந்த இரண்டுக்கும் எதிராகப் போராடி வருகிறார். என்னைப்போன்ற எத்தனையோ பேர் அவரை 'அப்பா’ என்றே அழைக்கிறோம்!

-அதிரும்..