Published:Updated:

மத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Vikatan Correspondent
மத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குல்பகார்: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன்னுடைய முகநூல் (ஃபேஸ்புக்) பதிவில், ''உச்ச நீதிமன்ற தீர்ப்பு தவறான தர்க்கத்தின் அடிப்படையில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பலவீனப்படுத்தப்படுகிறபோது ஜனநாயகத்துக்கு அது ஆபத்தாக முடியும்'' என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நீதித்துறை குறித்த அருண் ஜெட்லி கூறிய இந்த கருத்து பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறும்போது, ''உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருண் ஜெட்லி தெரிவித்த கருத்து துரதிருஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது. மூத்த வழக்கறிஞராக உள்ள அருண் ஜெட்லி, நீதித்துறைக்கு எதிராக கருத்து வெளியிட்டது மிகவும் தவறான செயலாகும்.

இது இந்திய ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. நீதித்துறையை விமர்சிப்பதை விட்டு விட்டு நாட்டின் முக்கிய துறையை கையில் வைத்திருக்கும் அவர், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நாளிதழ்களில் வெளியான செய்திகளை ஆதாரமாக கொண்டு, தானாக முன்வந்து உத்தரபிரதேச மாநிலம் குல்பகார் சிவில் நீதிபதி அங்கிட் கோயல், அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், நவம்பர் 19-ம் தேதி நேரில் ஆஜராகவும் அருண் ஜெட்லிக்கு போலீஸ் எஸ்.பி. மூலமாக நீதிபதி சம்மன் அனுப்பி உள்ளார்.

ஏற்கனவே இதே நீதிபதி தான் பாலியல் பலாத்காரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நவம்பர் 9-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.