Published:Updated:

பா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்கிறார் லாலு!

Vikatan Correspondent
பா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்கிறார் லாலு!
பா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்கிறார் லாலு!
பா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்கிறார் லாலு!

பாட்னா: பா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார்.

பிகாரில் தற்போது மூன்றாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினியும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

நேற்று ஒரே நாளில் 3 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். அப்போது, ''பிகார் மாநிலம் வளம் பெற வேண்டுமானால் மோடி நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தேர்ந்து எடுங்கள். நிதிஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவும் கடந்த காலங்களில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.

ஹேமமாலினியின் இந்த பிரசாரம் பற்றி ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நடிகை ஹேமமாலினியை கொண்டு வந்து பிரசாரம் செய்தால் எல்லாம் மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். ஹேமமாலினி சொல்வதை கேட்டு எல்லாரும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பிகாரில் பா.ஜ.க. படுதோல்வி அடைவதை பார்க்க போகிறீர்கள். பா.ஜ.க. தோற்பதை நடிகை ஹேமமாலினியால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. ஹேமமாலினியை பார்த்ததும் பிகார் மாநில மக்கள் ஓட்டுப் போட்டுவிட மாட்டார்கள். அப்படி நினைத்தால் அது பா.ஜ.க.வினருக்கு ஏமாற்றமாகவும், தவறாகவும் முடியும்" என்றார்.