Published:Updated:

ராஜராஜ சோழனை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?

 ராஜராஜ சோழனை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?
ராஜராஜ சோழனை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?

ராஜராஜ சோழனை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?

 ராஜராஜ சோழனை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?

ராஜராஜ சோழனின் 1030-வது சதய விழா இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், உலகம் போற்ற கொண்டாடப்பட வேண்டிய விழா, உள்ளூர் விழாவாக கொண்டாடப்பட்டது என்றும் உடையாளூரில் அவர் சமாதி அமைந்துள்ள இடத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலை எழுப்பி, தமிழர்களின் புகழை உலகறிய செய்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினத்தை சதய விழாவாக கொண்டாடுகிறது தமிழக அரசு. இந்த ஆண்டு 1030-வது சதய விழா 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை அரசு சரியான முக்கியத்துவம் கொடுத்து நடத்தாமல் உள்ளூர் விழா போல் நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.

“ ராஜராஜ சோழன் தன்னுடைய ஆட்சித் திறமையால் உலகின் பெரும்பகுதியை ஆண்ட பேரரசன் என அனைவராலும் போற்றப்பட்டவன். அது மட்டும் இல்லாமல் தமிழர்களின் புகழையும் வீரத்தையும் உலக அறியச் செய்ததுடன், கட்டடக் கலையிலும் சிறந்து விளங்கினான். ஆயிரம் ஆண்டைக் கடந்து இன்றும் கம்பீரமாய் நிற்கிறது அவன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில். உலக புராதன சின்னங்களில் ஒன்றாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி புகழ்கொண்ட ஒரு மன்னனுடைய விழாவை, அவர் பிறந்த தினத்தில், அரசு ஆண்டுதோறும் ஒரு உள்ளூர் விழாபோல் நடத்திவருவது வேதனை அளிக்கிறது.

இந்த விழா தமிழக மக்களுக்கான பொதுவான விழா. ஆனால் தமிழகம் முழுவதும் சென்றடையும் வகையில் சரியான விளம்பரங்களை தமிழக அரசு செய்யவில்லை. தென் மாவட்டம் ஒன்றில் ஆண்டுதோறும் நடக்கும் ஒரு தலைவரின் நினைவு தினத்துக்கு ஆட்சியாளர்கள் அறிக்கை கொடுப்பதுடன், நேரில் சென்றும் அஞ்சலி செலுத்துவார்கள். விழாவும் பிரமாண்டமாக நடக்கும்.  ஆனால் அதே அரசு, மாமன்னன் விழா குறித்து ஒரு அறிக்கைகூட கொடுக்காதது வேதனையளிப்பதாக உள்ளது.

 ராஜராஜ சோழனை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?

ராஜராஜன் சிலைக்கு பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதால், பாதுகாப்புப் பணிக்கு பெரும் அளவில் போலீஸ் குவிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் வருவதற்கு அச்சம் காட்டுகிறார்கள். கோயில் வளாகத்தில் நடந்த பல நிகழ்சிகளில் பொதுமக்கள் கூட்டம் இல்லாமலே நடந்தது.

கடந்த திமுக ஆட்சியில், கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைந்ததை விழாவாக எடுத்தார்கள். அதற்கு தமிழகம் முழுக்க இருந்து மக்கள் வரும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டது. 5 நாட்கள் விழாவும் பிரமாண்டமாக நடந்தது. அதேபோல் வரும் ஆண்டுகளில் விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.

 ராஜராஜ சோழனை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?

மேலும் தொடர்ந்த அவர்கள், ''தராசுரம் உடையாளூரில் ராஜராஜ சோழனுடைய சமாதி இருக்கிறது. அந்த இடத்தில் தற்போது லிங்கம் மட்டும் உள்ளது. அதை பொதுமக்கள் பராமரித்து வருவதுடன் சதய விழா தினத்தில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். அந்த இடத்தில் சமாதி இருந்தது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், ஆய்வாளர்களும் கூறிவரும் நிலையில், அரசு அதை காதில் வாங்கி அதற்கான ஆய்வுகளை செய்ய உத்தரவிட வேண்டும். அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டி, சதய விழா தினத்தில் தமிழக அரசே அங்கும் விழா எடுக்க வேண்டும்'' என்றனர்.

இனியாவது உலகம் போற்ற நடக்குமா விழா?

- கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு