Published:Updated:

மனம் திறந்து பேசுவதற்கு பதில் மக்கள் மனதை புரிந்துகொள்ளுங்கள்: மோடியை தாக்கும் உத்தவ் தாக்கரே!

மனம் திறந்து பேசுவதற்கு பதில் மக்கள் மனதை புரிந்துகொள்ளுங்கள்: மோடியை தாக்கும் உத்தவ் தாக்கரே!
News

தானே: மனம் திறந்து பேசுவதற்கு பதில் மக்கள் மனதில் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று பிரதமர் மோடியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

மகாராஷ்டிர நகராட்சி தேர்தலை கூட்டணி கட்சிகளான பா.ஜ.க-வும் சிவசேனாவும் தனித்தனியாக எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ (மனதிலிருந்து பேசுகிறேன்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக மக்களுடன் உரையாடி வருவதை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் கல்யாணில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, “மக்களிடம் மனம் திறந்து பேசுவதற்கு பதிலாக, அந்தக் கட்சி(பா.ஜ.க) மக்களின் மனதில் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எல்லாம் வெற்று வாக்குறுதிகளைத் தவிர வேறு எதுவுமில்லை" என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.