Published:Updated:

வல்லபாய் பட்டேலின் உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி!

வல்லபாய் பட்டேலின் உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி!
வல்லபாய் பட்டேலின் உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி!

புதுடெல்லி: இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாள் முன்னிட்டு, டெல்லியில் அவரது உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

வல்லபாய் பட்டேலின் உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி!

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிற சர்தார் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

வல்லபாய் பட்டேலின் உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி!

தலைநகர் டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை பீடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பட்டேலின் உருவப்படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, ''இந்தியாவின் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் சித்தாந்தமும், பாரம்பரியமும் எந்நாளும் மறக்க முடியாதது. சாணக்கியருக்கு அடுத்தபடியாக இந்தியாவை ஒருமைப்பாட்டால் ஒன்றிணைத்த பட்டேலின் ஆற்றலுக்கு நான் தலைவணங்குகிறேன்.

நமது நாட்டின் மீது அவரது ஆசிகள் என்றென்றும் இருந்து, புதிய வளர்ச்சியை நோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என்றார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று  காலை 8.15 மணியளவில் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ (Run for Unity) என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.