Published:Updated:

பாடகர் கோவன் கைதுக்கு இயக்குனர் அருண்மொழி கண்டனம்!

 பாடகர் கோவன் கைதுக்கு இயக்குனர் அருண்மொழி கண்டனம்!
News
பாடகர் கோவன் கைதுக்கு இயக்குனர் அருண்மொழி கண்டனம்!

பாடகர் கோவன் கைதுக்கு இயக்குனர் அருண்மொழி கண்டனம்!

 பாடகர் கோவன் கைதுக்கு இயக்குனர் அருண்மொழி கண்டனம்!

சென்னை: "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை இயற்றிய பாடகர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு திரைப்பட இயக்குனர் அருண்மொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பாடகர் கோவன் தமிழகத்தில் மதுஒழிப்பை வலியுறுத்தி "மூடு  டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை இயற்றி வீதி நாடகம் மூலம் பிரச்சாரம் செய்துவந்தார்.

மேலும் அவர், மது ஒழிப்புப் பிரச்சார பாடல்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தப் பாடல்கள் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் இருப்பதாக போலீசார், கோவன் மீது பதிவு செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
திருச்சியில் கைது செய்யப்பட்ட கோவனை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்துவந்தனர். பின்னர் ரகசிய இடத்தில் கோவனிடம் விசாரணை நடத்திய போலீசார்,எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 6 -ம் தேதி வரை அவரை காவலில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கோவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில், மதுஒழிப்புக்காக குரல்கொடுத்த கோவனின் கைது தமிழகத்தின் அரசியல் வட்டாரத்திலும் இலக்கியவாதிகள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜனநாயகத்தின் குரல்வளை  எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை.அதிமுக அரசின் இந்த ஜனநாயக  விரோதச் செயலை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு,கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை உடனடியாக விடுதலை  செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
அதே போல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், " மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்  என்று போராடுவோர் மீது அதிமுக அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவிவிடுகிறது.அதிமுக படைபோல்  காவல்துறை செயல்படுவதும்,மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும்  பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது. அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும்,கருத்து சுதந்திரம் அளித்துள்ள  அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 பாடகர் கோவன் கைதுக்கு இயக்குனர் அருண்மொழி கண்டனம்!

கோவனின் கைது குறித்து கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குனர் அருண்மொழி, " கோவனின் கைது தமிழகத்தில் பேச்சுரிமை கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.சுதந்திரப் போராட்டம் நடந்த பாரதி காலத்திற்கு திரும்ப போனது போல இருக்கிறது. ஆளும் அரசு இது போன்ற விசயங்களைப் பார்த்து பயப்படுகிறது.பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
 
இதனால் கடும் அதிருப்தி நிலவுகிறது. இது போன்ற அத்தியாவசிய பிரச்னைகளில்  இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கோவனின் கைது நடந்துள்ளது. மதுபான கடைகளிலும்,பாட்டில்களிலும் 'மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு'  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது .

திரைப்படங்களிலும் மது குடிக்கும் காட்சிகள் வரும்போது இதே வாசகங்கள் காட்டப்படுகின்றன. இதற்காக யாரைக் கைது செய்திட முடியும்? " என்று கூறினார்.

கோவனின் கைதால் மீண்டும் தமிழகத்தில் மதுவிலக்குப் போராட்டங்கள் தீவிரமடையும் சூழல் நிலவுகிறது.