Published:Updated:

பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது: குஷ்பு

Vikatan Correspondent
பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது: குஷ்பு
பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது: குஷ்பு
பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது: குஷ்பு

சென்னை: பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பிகார் சட்டபேரவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்து உள்ளது. இதன் மூலம் பா.ஜ.க.வுக்கு தோல்வி ஆரம்பித்து விட்டது. இனிமேல் அக்கட்சி பல தோல்விகளை சந்திக்க உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுதான் இந்த தோல்விக்கு காரணம்.

அறிஞர்கள், சாதனையாளர்கள் சகிப்புத்தன்மை இல்லை எனக்கூறி விருதுகளை திரும்ப வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி யாரையும் தூண்டிவிடவில்லை. அப்படி விருதுகளை திரும்ப வழங்குபவர்கள் குறித்து பா.ஜ.க.வினர் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சரியானது அல்ல.தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் செய்வேன். எங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் சொல்லும்போது பிரசாரம் செய்வேன்" என்றார்.