Published:Updated:

பிகார் தோல்விக்கு பின் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் : இங்கிலாந்து சென்றடைந்தார்!

பிகார் தோல்விக்கு பின் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் : இங்கிலாந்து சென்றடைந்தார்!
பிகார் தோல்விக்கு பின் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் : இங்கிலாந்து சென்றடைந்தார்!

பிகார் தோல்விக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரிட்டனுக்கு நேற்றிரவு புறப்பட்ட அவர் இன்று மதியம் லண்டன் சென்றடந்தார். லண்டன் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பிகார் தோல்விக்கு பின் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் : இங்கிலாந்து சென்றடைந்தார்!

இதையடுத்து, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், இருநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். அடுத்து  பிரிட்டன் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார். லண்டனின் 'மன்ஹட்டன்' என்று அழைக்கப்படும் கைடுஹால் பகுதிக்கு செல்லும் அவர்,  இங்கிலாந்து தொழிலதிபர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வியாழக்கிழமை  இரவு பக்கிங்காம்ஷயர் பகுதியில் உள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் ஓய்வு இல்லத்தில் பிரதமர் மோடி தங்குகிறார். பிரிட்டன் பிரதமருடன் இங்கு இரவு விருந்து அருந்துகிறார்.

வெள்ளிக்கிழமை மீண்டும் லண்டன் திரும்பும் பிரதமர் மோடி இங்கிலாந்து தொழிலதிபர்களை சந்திக்கிறார். இதில் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

வெள்ளிக்கிழமை மதியம் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரதமர் மோடிக்கு மதிய விருந்தளிக்கிறார். முன்னதாக பக்கிங்காம் அரண்மனையில் பிரிட்டன் ராயல் விமானப்படை விமானங்கள் இந்திய தேசிய கொடி வானத்தில் ஏந்தி பறக்க வைக்கும் சிறப்பு  நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் இந்திய வம்சாவளி மக்களுடன் பிரதமர் உரையாற்றுகிறார்.

கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி பஸவேஸ்வரா மற்றும் அம்பேத்கர் ஆகியோர்  சிலைகளையும் லண்டனில் பிரதமர் திறந்து வைக்கிறார். இங்கிலாந்து பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோலிஹில் பகுதியில் அமைந்துள்ள டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஜாகுவார் கார் நிறுவனத்தை  பிரதமர்  பார்வையிடுகிறார்.

தொடர்ந்து துருக்கித் தலைநர் அங்காராவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில்  பங்கேற்க  லண்டனில் இருந்து புறப்படுகிறார். நரேந்திர மோடி இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் பிரிட்டனுக்கு மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது.