Published:Updated:

'மோடி எஃபெக்ட்' புத்தகத்தை பணம் வாங்கிக் கொண்டு எழுதியதாக எழுத்தாளர் ஒப்புதல்!

விகடன் விமர்சனக்குழு
'மோடி எஃபெக்ட்' புத்தகத்தை பணம் வாங்கிக் கொண்டு எழுதியதாக எழுத்தாளர் ஒப்புதல்!
'மோடி எஃபெக்ட்' புத்தகத்தை பணம் வாங்கிக் கொண்டு எழுதியதாக எழுத்தாளர் ஒப்புதல்!

டந்த 2014ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் பிரதம வேட்பாளராக  நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

'மோடி எஃபெக்ட்' புத்தகத்தை பணம் வாங்கிக் கொண்டு எழுதியதாக எழுத்தாளர் ஒப்புதல்!

தேர்தல் முடிவுற்றதும்' மோடி எஃபெக்ட்' என்ற பெயரில் புத்தகம் ஒன்று பிரிட்டன் பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகரும் பி.பி.சி. முன்னாள் செய்தியாளருமான லேன்ஸ் பிரைஸ்  எழுதினார். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் மோடி எஃபெக்ட் புத்தகம் வெளியிடப்பட்டது.

தற்போது இந்த புத்தகம் எழுதுவதற்காக, தனக்கு பணம் அளிக்கப்பட்டதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகையிடம் லேன்ஸ் பிரைஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.அதோடு, ' ''அதற்கு முன்பு நரேந்திர மோடியை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் மோடிக்கு நெருக்கமானவர் ஒருவர் என்னை அணுகியதால் பணம் வாங்கிக் கொண்டு அந்த புத்தகத்தை எழுதியதாக'' அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பணம் மொத்தமாக தனக்கு அளிக்கப்படவில்லையென்றும் இந்தியா வருவதற்கான விமானக்கட்டணம், தங்குமிடத்துக்கான செலவு போன்றவை செய்யப்பட்டதாக லேன்ஸ் பிரைஸ் தெரிவித்துள்ளார்.  கடந்த பொது தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிக்கு காரணமான பலரையும் நேரில் சந்தித்து ஆய்வு செய்து இந்த புத்தகத்தை பிரைஸ் எழுதியுள்ளார் .அதற்காக அவர் 4 முறை இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார்.  
 

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த நிலையில் டைம்ஸ் இதழ், லேன்ஸ் பிரைசின் பேட்டியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.