Published:Updated:

கடலூர் வெள்ள பாதிப்பு: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

விகடன் விமர்சனக்குழு
கடலூர் வெள்ள பாதிப்பு: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
கடலூர் வெள்ள பாதிப்பு: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கடலூர்: வெள்ள அபாயம் வரப்போகிறது எனத் தெரிந்தும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "வெள்ள அபாயம் வரப்போகிறது என்று தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை அரசு. கோடநாட்டில் ஓய்வு எடுத்துவிட்டு வந்து இப்போதுதான் அதிகாரிகளுடன் பாசாங்கு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார் முதல்வர். இதை முன்னரே நடத்தியிருந்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

கடலூர் வெள்ள பாதிப்பு: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

வெள்ள தடுப்பு பணிக்காக பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளுக்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதை செலவு செய்தார்களா, இல்லையா என்று தெரியவில்லை. தானே புயலில் கோடிக்கணக்கில் நடந்த ஊழலைப்போல் இப்போதும் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. கருணாநிதி கூறியதுபோல் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் புள்ளி விவரத்தை சேகரித்து கருணாநிதியிடம் ஒப்படைப்பேன். அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாவட்ட செயலாளர்களும் புள்ளி விவரங்கள் சேகரித்துள்ளனர். அவற்றையும் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்" என்றார்.

-க.பூபாலன்

படம்: எஸ்.தேவராஜன்