Published:Updated:

முதல் முறையாக இந்தியர்: சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி துணைதலைவராக ரகுராம் ராஜன் நியமனம்!

விகடன் விமர்சனக்குழு

மும்பை: சர்வதேச செட்டில்மெண்ட் வங்கியின் துணைத்தலைவராக ரகுராம் ராஜன் நியமனம் செய்யப்படுள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல்வர் இந்தியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள மத்திய வங்கிகளின் நிதி நிலையை பாதுகாப்பதற்காக வரைமுறை மற்றும் விதிகளை உருவாக்கி வருவது சர்வதேச செட்டில்மெண்ட் வங்கியாகும் (Bank for International Settlements). பி.ஐ.எஸ். என அழைக்கப்படும் இதன் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜென்ஸ் வெயிட்மேன் உள்ளார்.

இந்த வங்கியின் முக்கியத்துவம் வாய்ந்த துணைத்தலைவராக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த பதவியில் ரகுராம் ராஜன் மூன்றாண்டு காலம் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.