Published:Updated:

வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2000 கோடி உடனடியாக தேவை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Vikatan Correspondent

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் 169 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.