Published:Updated:

''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுதான் அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ''- மோகன் பகவத்

Vikatan Correspondent
''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுதான் அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ''- மோகன் பகவத்
''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுதான் அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ''- மோகன் பகவத்

யோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுதான், அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுதான் அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ''- மோகன் பகவத்

விஸ்வ இந்து பிரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் அண்மையில் மரணமடைந்தார். டெல்லியில் நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ''அசோக் சிங்காலுக்கு இரு கனவுகள் இருந்தது. அதில் ஒன்று அயோத்தியில் ராமர் கோவில் எழுப்புவது. மற்றொன்று உலகம் முழுக்க வேதங்களை பரப்புவது.

அவரது கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. முதலில் ராமர் கோவிலை கட்டுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்'' என்றார்.

கடந்த மாதம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பாக அசோக் சிங்காலின் பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், அயோத்தியில் ராமர் ஜென்ம கோவில் கட்டுவதற்கு உறுதி பூண்டது குறிப்பிடத்தக்கது.