Published:Updated:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தினமும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

Vikatan Correspondent

புதுடெல்லி: ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை  தினமும் விசாரிப்பதற்கான தேதி ஜனவரி 8-க்குப் பின் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய விஷயங்களைத் தொகுப்பாக அளிக்குமாறு கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விசாரணை குறித்த விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் வழக்கினை விரைவாக விசாரிக்க முடியும் என்றும், வழக்கை தினமும் விசாரிப்பதற்கான தேதி ஜனவரி 8-க்குப் பின் அறிவிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.