Published:Updated:

பாஜகவில் இருந்து விலகினார் கலாமின் அண்ணன் மகன்!

Vikatan Correspondent
பாஜகவில் இருந்து விலகினார் கலாமின் அண்ணன் மகன்!
பாஜகவில் இருந்து விலகினார் கலாமின் அண்ணன் மகன்!
பாஜகவில் இருந்து விலகினார் கலாமின் அண்ணன் மகன்!

மதுரை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் மகன் இப்ராஹிம், பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 2வது சகோதரர் முஸ்தபா கமாலின் மகன் காஜா செய்யது இப்ராஹிம். இவர் பாஜக மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

இதனிடையே, கலாமின் நினைவாக டெல்லியில் அவர் வசித்து வந்த இல்லத்தை அறிவுசார் மையமாக அமைக்க வேண்டும் என கலாம் குடும்பத்தினரும், பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். ஆனால், கலாம் வசித்த இல்லத்தை அறிவுசார் மையமாக அமைக்காததுடன், கலாமின் உடமைகளை ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அனுப்பி வைத்தது மத்திய அமரசு. தற்போது இந்த இல்லம் மத்திய இணை அமைச்சர் மகேஷ் பட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலாம் குடும்பத்தினர் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசின் செயலை கண்டித்து, பாஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

-இரா.மோகன்

படம்: உ.பாண்டி