Published:Updated:

கருணாநிதி-ஸ்டாலின், பன்னீர்செல்வம்-சசிகலா: பரபரப்பை கிளப்பியுள்ள ஜூ.வி. சர்வே!

கருணாநிதி-ஸ்டாலின், பன்னீர்செல்வம்-சசிகலா: பரபரப்பை கிளப்பியுள்ள ஜூ.வி. சர்வே!
கருணாநிதி-ஸ்டாலின், பன்னீர்செல்வம்-சசிகலா: பரபரப்பை கிளப்பியுள்ள ஜூ.வி. சர்வே!

மிழகத்தில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தி.மு.க.வில் கருணாநிதியா, மு.க.ஸ்டாலினா, அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வமா, சசிகலாவா என்று ஜூனியர் விகடன் நடத்திய சர்வே தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதி-ஸ்டாலின், பன்னீர்செல்வம்-சசிகலா: பரபரப்பை கிளப்பியுள்ள ஜூ.வி. சர்வே!

1989-ல் இருந்து அ.தி.மு.க-வின் ஒன்வுமன் ஆர்மியாக இருந்து வருகிறார் ஜெயலலிதா. ‘அ.தி.மு.க-வின் நம்பர் டூ யார்?’ என்கிற கேள்வி எல்லாக் காலங்களிலும் எழுப்பப்பட்டு வருகிறது. நெடுஞ்செழியன் தொடங்கிப் பல பெயர்கள் அடிபட்டு வந்தன. அது இப்போது சசிகலா,ஓ.பன்னீர்செல்வம் வரையில் வந்து நிற்கிறது. ‘அ.தி.மு.க-வின் நம்பர் டூ யார்?’ என்கிற கேள்விக்கு விடை தேடி அதையே சர்வேயில் கேள்வியாக வைத்தது ஜூ.வி.

‘அடுத்த கேள்வியாக போயஸ் கார்டனில் இருந்து அப்படியே கோபாலபுரம் பக்கம் போன ஜூ.வி., தி.மு.க. வென்றால் அடுத்த முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்கிற கேள்வியுடன், ‘தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யாருக்கு உங்கள் ஆதரவு’ என்று கேள்வியை வைத்திருந்தது.

கருணாநிதி-ஸ்டாலின், பன்னீர்செல்வம்-சசிகலா: பரபரப்பை கிளப்பியுள்ள ஜூ.வி. சர்வே!

இந்த ஜூ.வி. ‘ஸ்பெஷல் சர்வே’-யில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட விகடன் டீம் பொதுமக்களை சந்தித்தது. கிராமம், நகரம் என புகுந்து புறப்பட்ட ஜூ.வி. டீம் ஆண், பெண், இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என பல தரப்பு மக்களைச் சந்தித்து இந்த சர்வேயை முடித்துள்ளது.

இந்த சர்வே  அ.தி.மு.க., தி.மு.க. என இரு கட்சி வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் மாற்றத்தை மக்கள் மட்டுமல்லாமல் கட்சியினரும் எதிர்பார்த்து இருக்கின்றனரா என தெரிய வந்துள்ளது.  தமிழகம் முழுக்க பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள ஜூ.வி. சர்வேயை 'டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியும் பிரதிபலித்துள்ளது.