Published:Updated:

தனிநபர் கடனில் தமிழ்நாடு முதலிடம் என்பதுதான் அதிமுக சாதனையா?: ராமதாஸ் கேள்வி

தனிநபர் கடனில் தமிழ்நாடு முதலிடம் என்பதுதான் அதிமுக சாதனையா?: ராமதாஸ் கேள்வி
தனிநபர் கடனில் தமிழ்நாடு முதலிடம் என்பதுதான் அதிமுக சாதனையா?: ராமதாஸ் கேள்வி

சென்னை: தனிநபர் கடனில் தமிழ்நாட்டை முதலிடம் பிடிக்க வைத்ததுதான் அதிமுக அரசின் சாதனையா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் பொருளாதார நிலை மற்றும் கடன்சுமை குறித்து 'இந்தியா ஸ்பெண்ட் ' (India Spend) என்ற  பொருளாதார இதழ் வெளியிட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. தனிநபர் கடன் சுமையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருப்பதாக அந்த இதழ் தெரிவித்திருக்கிறது.

இவை அனைத்துமே 2014 - 15 வரையிலான கணக்குகள் ஆகும். 2015-16 வரையிலான ஐந்தாண்டு கணக்கைப் பார்த்தால் தமிழகத்தின் தனிநபர் கடன்சுமை ரூ.31,192 ஆக அதிகரிக்கும். பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.2.01 லட்சம் கோடி கடனையும் கணக்கில் கொண்டால்,  தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.60,766 ஆக அதிகரிக்கும். அதேபோல், தமிழகத்தின் வட்டி சுமையும் 12.52% ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் தமிழகத்தின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் 108% ஆக அதிகரித்துள்ளது. அதிமுக அரசு பத்வியேற்கும் போது  ஒரு லட்சத்து 1710 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன்சுமை,  இப்போது ரூ. 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக அதிகரித்து விட்டது.

தனிநபர் கடனில் தமிழ்நாடு முதலிடம் என்பதுதான் அதிமுக சாதனையா?: ராமதாஸ் கேள்வி

அதாவது ஒவ்வொரு தனிநபர் மீதும்  ரூ.31,192 கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.2.01 லட்சம் கோடி கடனையும் சேர்த்தால், தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதான கடன்சுமை ரூ.60,766 ஆக உயர்ந்திருக்கும்.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக,பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். இந்தப் பிரத்தியேக திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து ரூ.1,01,710 கோடி கடன் வாங்கப்பட்டிருந்த நிலையில், 5 ஆண்டுகளில் மட்டும் அதைவிட அதிகமாக ரூ.1,09,773 கோடி கடன் வாங்கி தமிழகத்தை மீளாக் கடன் துயரில் ஆழ்த்தியதுதான் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனையாகும்.

இதேநிலை தொடர்ந்தால்  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கடனாளியாகவே பிறந்து கடனாளியாகவே உயிரிழக்கும் நிலை ஏற்படும். இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் தமிழகத்தை இவ்வளவு கடன்சுமை கொண்ட மாநிலமாக மாற்றிய  அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை வரும் தேர்தலில் செய்து முடிக்க தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.