Published:Updated:

'ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பால் தென்னிந்திய இளைஞர்கள்தான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர்!'

'ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பால் தென்னிந்திய இளைஞர்கள்தான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர்!'
'ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பால் தென்னிந்திய இளைஞர்கள்தான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர்!'

புதுடெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பால் தென்னிந்திய இளைஞர்களே அதிகம் கவரப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண்  ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

அவர், டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் போன்ற தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த இந்திய இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் கருத்துக் கூற எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளுடன் தென் இந்தியாவுக்கு பாரம்பரியமாகவே அதிக தொடர்பு உள்ளது. எனவே அவர்கள் அங்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.  இதுமட்டும்தான் காரணம் என்று நான் சொல்லவில்லை.

'ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பால் தென்னிந்திய இளைஞர்கள்தான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர்!'

ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளால் நமக்கு சில பிரச்னைகள் உள்ள போதிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளை போல அச்சுறுத்தல் நமக்கு இல்லை. இதற்கான பெருமை முஸ்லிம்களையும் சாரும்”  என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை மதம் சார்ந்ததாகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்காளம் ஹவுரா பகுதியில், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து கருத்து கூறிய கிரண் ரிஜிஜூ, நிச்சயமாக அங்கு பாதிக்கப்படும் சில பகுதிகள் உள்ளது என்றும், இதற்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் கூறினார்.