Published:Updated:

'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' -பா.ஜ.க பெண் நிர்வாகி தடாலடி

விகடன் விமர்சனக்குழு
'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' -பா.ஜ.க பெண் நிர்வாகி தடாலடி
'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' -பா.ஜ.க பெண் நிர்வாகி தடாலடி
'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' -பா.ஜ.க பெண் நிர்வாகி தடாலடி

கோவை:  நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக பா.ஜ.க முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் தேசிய மகளிர் ஆணையத்தலைவருமான லலிதா குமாரமங்கலம் பேசியிருப்பது பா.ஜ.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சார்பில், மகளிர் சங்கம விழா இன்று நடந்தது. விழாவில் தேசிய மகளிர் ஆணையத்தலைவர் லலிதா குமாரமங்கலம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,  'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற தொனியில் அவர் பேசினார். பி.ஜே.பி.யைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான லலிதா குமாரமங்கலம்,  இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நான் பேசியது குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக நாட்டில் தனியாக நடக்கக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அதை வைத்துதான் நான் பேசினேன். தமிழகம், டெல்லி, ஹரியானா என சில இடங்களை குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி,  நாடு முழுவதும் பரவலாக பெண்கள் மீதான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். அதற்காக நிறைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோல் சமுதாயத்திலும் மாற்றங்கள் வர வேண்டி இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வும், பயிற்சியும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த பண்பு இல்லாமல் இந்த வன்முறை குறையாது.

'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' -பா.ஜ.க பெண் நிர்வாகி தடாலடி

நாட்டில் பலர்,  குரிப்பாக பொதுவாழ்வில் இருக்கும் பெண்களும், ஆண்களும் பெண்களுக்கு எதிரான விஷயத்தில் தவறான கருத்துகளை தெரிவித்து விடுகிறார்கள். எனவே பெண்கள் விஷயத்தில் கருத்துக்களை பதிவு செய்யும்போது, யோசித்து பதிவு செய்வது நல்லது.

தேசிய மகளிர் ஆணையம் சார்பில் முதியோர், பெண்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதற்காக இந்தாண்டில் 5 கூட்டம் நடத்தி, மாநில மகளிர் ஆணையத்தோடு ஆலோசித்துள்ளோம்.

தேசிய மகளிர் ஆணையம் அதிகாரம் இல்லாத அமைப்பு எனச் சொல்வதை ஏற்க முடியாது. நாங்கள் பரிந்துரைத்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல சம்பவங்களில் ஆணையம் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது” என்றார்.

மேலும், “விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் ஆணையம் சார்பில் தமிழக அரசிடம் நாங்கள் விளக்கம் கேட்டிருந்தோம். அதற்கு அரசு சார்பில் பதில் வந்திருக்கிறது” என்றார்.

மத்திய அரசுக்கு சங்கடம் தரும்வகையிலான பா.ஜ.க பெண் பிரமுகரின் இந்த பேச்சு, அரசியல் அரங்கில் என்னன்ன பரபரப்புகளை பற்றவைக்கப்போகிறதோ...?

- ச.ஜெ.ரவி