Published:Updated:

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: முரளிதரராவ் தகவல்

விகடன் விமர்சனக்குழு
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு:  முரளிதரராவ் தகவல்
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: முரளிதரராவ் தகவல்

ராமநாதபுரம்:  தமிழக மீனவர்கள் பிரச்னை இன்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்டு வருவதால், விரைவில் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளரும், தமிழக பா.ஜ.க பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு:  முரளிதரராவ் தகவல்

ராமநாதபுரத்தில் பா.ஜ.க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளரும், தமிழக பா.ஜ.க பொறுப்பாளருமான முரளிதர் ராவை ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சிறைபிடித்து செல்லுதல் போன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

மேலும் தமிழக மீனவர்கள் பிரச்னை இன்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்டு வருகிறார். எனவே விரைவில் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசின் பிடியில் உள்ள படகுகளை மீட்கவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு:  முரளிதரராவ் தகவல்

தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி ஏற்பட்டால் முழுமையான மதுவிலக்கு கொண்டு வரப்படும். தி.மு.கவும், அ.தி.மு.கவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் ஆட்சியை பிடித்து விடலாம் என நினைக்கிறார்கள். அது நிறைவேறாது’’ என்றார்.

- இரா.மோகன்
படங்கள்:
உ.பாண்டி