Published:Updated:

அமைச்சருடன் காரசார மோதல்: பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!

அமைச்சருடன் காரசார மோதல்: பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!
அமைச்சருடன் காரசார மோதல்: பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அமைச்சரின் சொல்படி நடக்க மறுத்த பெண் போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் சண்டிகர் அருகே உள்ள மாவட்டத்தில்,  மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் மற்றும் பெண் எஸ்.பி. சங்கீதா கலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சருடன் காரசார மோதல்: பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!

அப்போது மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜ், பெண் எஸ்.பி. சங்கீதா கலியாவிடம் கேட்டார். 

அதற்கு பதிலளித்த கலியா,  கடந்த 10 மாதங்களில் சுமார் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால்  " கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை" என்று அமைச்சர் விஜ் அதிருப்தியுடன் கூறினார். மேலும் சாராய மாஃபியா உடன் போலீசார் கைகோர்த்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதற்கு  எஸ்.பி. கலியா, சாராய விற்பனைக்கு அரசுதான் உரிமங்கள் வழங்குகிறது என பதிலடி கொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் விஜ், அந்த பெண் எஸ்.பி.யை கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு   சப்தமுடன் உத்தரவிட்டார். அதற்கு அந்த பெண் எஸ்.பி. மறுத்ததால், 'பெண் எஸ்.பி. இருக்கும் வரை நான் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன்' என்று கூறிவிட்டு அமைச்சர் அனில் ரிஜ் கோபத்துடன் எழுந்து வெளியே சென்றுவிட்டார். இதனால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பெண் எஸ்.பி. சங்கீதா கலியா, உடனடியாக அந்த மாவட்டத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.