Published:Updated:

வெள்ள பாதிப்பு பகுதியில் மறுவாழ்வு பணிக்கு ரூ.1 கோடி அறிவித்தார் அன்புமணி!

விகடன் விமர்சனக்குழு
வெள்ள பாதிப்பு பகுதியில் மறுவாழ்வு பணிக்கு ரூ.1 கோடி அறிவித்தார் அன்புமணி!
வெள்ள பாதிப்பு பகுதியில் மறுவாழ்வு பணிக்கு ரூ.1 கோடி அறிவித்தார் அன்புமணி!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
 

வெள்ள பாதிப்பு பகுதியில் மறுவாழ்வு பணிக்கு ரூ.1 கோடி அறிவித்தார் அன்புமணி!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தன. ஆனால், இதை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும், அதனால் இதை ‘‘கடுமையான பாதிப்புகள்’’ என அறிவிப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி வழங்கலாம் என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்திருக்கிறது. இந்த நல்லெண்ண நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கும் நாடாளுமன்ற செயலகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதன்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.