Published:Updated:

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசின் நிலை என்ன?: கருணாநிதி கேள்வி

 முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசின் நிலை என்ன?: கருணாநிதி கேள்வி
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசின் நிலை என்ன?: கருணாநிதி கேள்வி
 முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசின் நிலை என்ன?: கருணாநிதி கேள்வி

சென்னை: பிரதமரை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளமாநில முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,தமிழக அரசு இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி வினவியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

பிரதமரைச் சந்தித்து விட்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது, “முல்லைப் பெரியாறு அணை தனது உறுதியையை இழந்துள்ளது. இந்த அணை உடையுமானால் சென்னை போல கேரள மாவட்டங்கள் மூழ்கி விடும். இந்த விவகாரத்தில் புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு. இதுகுறித்து பிரதமரைச் சந்தித்து விரிவாக எடுத்துரைத் தோம். முல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். சென்னையைப் போல வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பிறகு கவலைப்படுவதை விட தற்போதே அதற்கான தீர்வு காண வேண்டும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மேலும் தற்போது உள்ள அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய, தேசிய மற்றும் சர்வ தேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து, அணையின் உறுதி மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

தமிழகத்தின் நிலை என்ன? இங்கேயும் ஒரு அரசு இருக்கிறது. ஒரு முதலமைச்சரும் இருக்கிறார். கேரள முதலமைச்சர், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு என்று சொன்னதற்கு தமிழக அரசின் சார்பில் உடனடியாகப் பதில் கூற வேண்டாமா? முல்லைப் பெரியாறு பிரச்சினை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும் இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவையோடும் பின்னிப் பிணைந்ததாயிற்றே! " என்று கூறியிருக்கிறார்.