Published:Updated:

வெள்ள பாதிப்பு: ஐ.ஏ.எஸ். தேர்வை தள்ளி வைக்க பிரதமருக்கு, கருணாநிதி வேண்டுகோள்!

வெள்ள பாதிப்பு: ஐ.ஏ.எஸ். தேர்வை தள்ளி வைக்க பிரதமருக்கு, கருணாநிதி வேண்டுகோள்!
வெள்ள பாதிப்பு: ஐ.ஏ.எஸ். தேர்வை தள்ளி வைக்க பிரதமருக்கு, கருணாநிதி வேண்டுகோள்!

சென்னை: தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐ.ஏ.எஸ். தேர்வை சில வாரங்களுக்கு

வெள்ள பாதிப்பு: ஐ.ஏ.எஸ். தேர்வை தள்ளி வைக்க பிரதமருக்கு, கருணாநிதி வேண்டுகோள்!

தள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மோடிக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், "பலத்த மழை மற்றும் எதிர்பாராத திடீர் வெள்ளப் பெருக்கால் சென்னையில் கடும் சேதம் ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை தாங்கள் பார்வையிட்டீர்கள். ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக சென்னையில் ஏறத்தாழ 1,000 மாணவர்கள் தயாராகி வந்தனர்.

நவம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை பெய்த பெரும் தொடர் மழையால் அவர்கள் கடும் துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாகி உள்ளனர். பயிற்சி மையம் அடையார் ஆற்றின் கரையில் உள்ளது. அது வெள்ளத்தால் சூழ்ந்து இருந்தது. அங்கிருந்த மாணவர்கள் உணவு மற்றும் மின்சாரம் இன்றி வெளியேறினார்கள். இதனால் தேர்வுக்காக ஆண்டு முழுவதும் தயாரானது வீணானது. சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திர பிரதேசத்திலும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.

மத்திய தேர்வாணை குழு ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு நடத்தினால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேச மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களுடன் தேர்வில் சரி சமமாக போட்டியிட முடியாது. அது பொது நீதி மற்றும் சமூக நீதிக்கு எதிராக அமையும்.

இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள். எனவே, ஐ.ஏ.எஸ். தேர்வை சில வாரங்களுக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் மிக அவசரமாக தலையிட வேண்டும் என வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
.