Published:Updated:

சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!
சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

மேடக்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

ஹைதராபாதை அடுத்துள்ள மேடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகா சண்டி யாகம் கடந்த புதன்கிழமை (23ஆம் தேதி) தொடங்கி ஐந்து நாள்களுக்கு நடைபெற்று வருகிறது. தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.

சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

இந்த யாகத்தில் சந்திரசேகர ராவ் தனது மனைவியுடன் தினமும் கலந்து கொள்கிறார். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கிறார்கள். நேற்று மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

மேலும், சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், ராம்பூர் மடாதிபதி மாதவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீபீட மடாதிபதி பரிபூரனாந்தா சுவாமிகள், திரிதண்ட மடாதிபதி சின்ன ஜீயர் ஆகியோரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். இன்று காலை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த யாகத்தில் கலந்து கொண்டார். அவருக்கு பூரண கும்பமரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

இந்நிலையில், யாகத்தின் இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் யாகம் நடைபெறும் பந்தலின் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஒமகுண்டத்திலிருந்து பரவிய தீ, யாகம் நடைபெற்ற பந்தலுக்குப் பரவியது. தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியதை கண்ட யாகம் நடத்திகொண்டிருந்த பூசாரிகளும், பொதுமக்களும் அங்கிருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

சந்திரசேகர ராவ் நடத்தும் மகா சண்டி யாக நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

இந்த தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தையடுத்து பந்தலில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. யாகம் நடைபெற்ற பந்தலின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தீ விபத்து காரணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கமாட்டார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.