''கனிமொழிக்கு எம்.பி பதவி கொடுப்பீர் களா?'' - கருணாநிதிக்குப் பிடித்தமான கேள்வியை நிருபர் ஒருவர் கேட்டார். ''காய்... கனி ஆகும்போது பார்த்துக்கொள்ளலாம்!'' என்று பதில் சொல்லிச் சிரித்தார் கருணாநிதி. காலத்தின் கோலம் பாருங்கள்!

கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரையில், கனிமொழி - ராசியான மகள். அவரது பிறப்புக்குப் பிறகுதான் கருணாநிதிக்கு முதலமைச்சர் நாற்காலி முதன்முறையாகக் கிடைத்தது. ஆனால், ஆறாவது முறையாக அதை அடைய கருணாநிதிக்குத் தடையாக, விடை சொல்ல முடியாத புதிராக இருக்கும் விவகாரங்களில் ஒன்றாக இப்போது கனிமொழி!

முதல் திருமணம் முறிந்த பிறகு, கவிதைகளுடன் வாழ்ந்தார் கனிமொழி. அந்த எழுத்தே அவருக்கு அரவிந்தனை அறிமுகம் செய்து, இரண்டாவது மண வாழ்க்கையைத் தொடங்கிவைத்தது. ஆதித்யாவின் வருகை அவரது மனதுக்கு உகந்ததாக இருந்தது. ஆர்ப்பாட்ட அரசியல் பிடிக்காதவராக 'பெரியாரிஸ்ட்’ மனோபாவத்துடன் வலம் வந்தார். 2003-ல் பொடா சட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்தியபோது, வெளியில் வந்து குரல் கொடுத்தார். கருணாநிதி ஐந்தாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோதும், அரசியலில் கனிமொழிக்கு ஆர்வம் இல்லை.

ஒரு தனியார் தொலைக்காட்சி, கனிமொழியையும் பாம்பே ஜெயஸ்ரீயையும் சேர்த்து வைத்துப் பேட்டி கண்டது. ''இதற்கு முன்னால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் நிச்சயம் எனக்கு இருந்தது இல்லை. இப்போதும் அந்த மாதிரி ஒரு எண்ணம் இல்லை!'' என்று கனிமொழி சொன்னபோது, இடைமறித்து எழுத்தாளர் சுஜாதா, ''கனிமொழி நீண்ட காலம் கவிதை எழுதிக்கொண்டு இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அவர் சீக்கிரமே அடுத்த நிலைக்குச் சென்றுவிடுவார்'' என்று சொன்னபோது, கனிமொழி சிரித்தார்!

கருணாநிதிக்கு சிறையில் கைதி உடை கொடுத்துவிட்டார்கள் என்ற தகவல் பரவிய தும், தனது உடலுக்குத் தீ வைத்துக்கொண்டு செத்த தொண்டன் இருந்த கட்சி தி.மு.க! ஆனால், இன்று தலைவரின் மனைவி தயாளுவையும் மகள் கனிமொழியையும்... லட்சக்கணக்கான தொண்டர்களின் வசூல் பணத்தில் கட்டிய அண்ணா அறிவாலயத்துக்குள் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்குப்பிடி போட்டபோது, தி.மு.க. தொண்டர்கள் அமைதியாக இருந்ததுகூட ஆச்சர்யமானது அல்ல. ''கருணாநிதி 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார். இதைப்போல எத்தனையோ சம்பவங்களை அவர் பார்த்திருப்பார்!'' என்று கனிமொழியால் நியாயப்படுத்த முடிந்ததுதான் அதிர்ச்சிக்கு உரியது. ராஜாத்தி அம்மாள் விரும்பிய அரசியல் தகுதியை கனிமொழி அடைந்துவிட்டார் என்பதற்கு இந்த வார்த்தைகள்தான் அடையாளம். ''சட்டப்படி எதிர்கொள்வேன்!'' என்றும் அவர் கூறியுள்ளார். சட்டப்படிதான் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கிறது!

இந்திய நிர்வாகத் துறை ஊழலின் உச்சியில் இருக்கிறது என்பதற்கு உதாரணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதா... இல்லையா? பிரதமர் பேச்சை ஆ.ராசா மீறினாரா... இல்லையா? கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் பின்பற்றப்பட்ட சட்ட திட்டங்களைத்தான் ராசா பின்பற்றினாரா... இல்லையா? இவை எல்லாம் சின்ன விஷயங்கள். சி.பி.ஐ. முன்வைத்துள்ள குற்றப்பத்திரிகையில் மிக மிக முக்கியமானது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்க ராசா பெற்ற ஆதாயம் என்ன என்பதுதான்!

'ஸ்வான் நிறுவனம், தன்னுடைய கிளை நிறுவனங்கள் மூலமாக, கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுத்த

214 கோடி, லஞ்சப் பணம்!’ என்கிறது சி.பி.ஐ. 'இல்லை... நாங்கள் கடனாக வாங்கினோம்.

31 கோடி வட்டித் தொகையுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுத்துவிட்டோம்’ என்கிறார் கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார். ராசா முறைகேடு செய்து மாட்டிக்கொண்ட பிறகு தான், 'நாங்கள் கடனாகத்தான் வாங்கினோம்’ என்று கலைஞர் தொலைக்காட்சி பணத்தைத் திருப்பிக் கொடுத்து இருப்பதை ஆதாரத்துடன் சொல்கிறது சி.பி.ஐ. அதாவது, திருட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது.

கிராமத்துக் கதை ஒன்று உண்டு. திருட்டுத்தனமாக தென்னை மரத்தில் ஏறியவன், சிக்கினான். 'நுங்கு எடுக்கப் போனேன்’ என்று உளறினான். 'தென்னை மரத்தில் எப்படிடா நுங்கு இருக்கும்?’ என்று அடித்துக் கேட்டார்கள். 'அதனால்தான் இறங்கிட்டேன்’ என்றானாம். கருணாநிதியும் கலைஞர் தொலைக்காட்சியும் அளிக்கும் விளக்கங்கள் அத்தனையும் இப்படித்தான் இருக்கின்றன.

இவற்றில் எதையும் சி.பி.ஐ. நம்பத் தயாராக இல்லை. 'கலைஞர் தொலைக்காட்சி செயல்பாடு களின் பின்னணியில் கனிமொழிதான் முக்கி யப் பங்கு வகிக்கிறார். ஆ.ராசாவை இரண்டா வது முறையாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்க தீவிர முயற்சி எடுத்தார் கனிமொழி’ என்று குற்றம் சாட்டுகிறது சி.பி.ஐ.

சி.பி.ஐ தனது புகாருக்கு வலுவான ஆதாரங் களாக, ஆசீர்வாதம் ஆச்சாரி, நீரா ராடியா ஆகிய இருவரையும் கொண்டுவருகிறது. சுமார் 10 ஆண்டுகளாக ஆ.ராசாவின் நிழலாக இருந்தவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. ராசாவின் நிழல் உலகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தவர் நீரா ராடியா. ராசாவுக்கும் கனிமொழிக்கும் எதிரான முக்கியமான இரண்டு சாட்சிகள் இவர்கள்தான். '2007-ம் ஆண்டு மே மாதம் கலைஞர் தொலைக்காட்சியை உருவாக்கும் வேலைகள் தொடங்கின. ராசா வீட்டில்வைத்து, மொரானி சகோதரர்களும் சரத்குமாரும் சந்தித்துப்

பேசினார்கள். டி.வி-க்கு அனுமதி வாங்குவது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி யிடம் ராசா பேசினார். கலைஞர் செய்தி சேனல் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் வீட்டுக்கு வந்து கனிமொழி கேட்டுக்கொண்டார். கலைஞர் டி.வி சேனலை டாடா ஸ்கை டி.டி.ஹெச் மூலம் ஒளிபரப்பும் பேச்சுவார்த்தையும் நடந்தது. இதில் நீரா ராடியாவும் கலந்துகொண்டார்!’ என்று ஆசீர்வாதம் ஆச்சாரி தேதி வாரியாகத் தனது வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.

சி.பி.ஐ. தரப்புக்கு இருக்கும் மிக முக்கியமான ஆதாரம், நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்கள். நீரா ராடியாவுடன், ஆ.ராசா, கனிமொழி, ரத்தன் டாடா, பத்திரிகையாளர் வீர் சங்வீ, பர்க்கா தத், ராசாவின் செயலாளரும் இப்போது திகார் சிறையில் இருப்பவருமான ஆர்.கே.சந்தோலியா, ராஜாத்தி அம்மாள், அமைச்சர் பூங்கோதை, ஆகியோரின் உரையாடல்கள்... ஆ.ராசாவை மீண்டும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆக்கியே தீர வேண்டும் என்று துடித்த துடிப்புகளாக உள்ளன. ஒன்பது தொலைபேசிகள் மூலமாக, 180 நாட்கள் நீரா ராடியா நடத்திய உரையாடல்களை வருமான வரித் துறை சட்டப்பூர்வமாகவே பதிவு செய்துள்ளது. 5,800 தொலைபேசி உரையாடல்கள் நீரா ராடியா சம்பந்தப்பட்டு பதிவாகி உள்ளன. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை மட்டும் அல்ல; தி.மு.க. என்ற கட்சியே எப்படி, யாரால் இயங்கி வருகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த டேப்.

இந்தப் பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக கருணாநிதி இன்னும் மறுக்கவில்லை. கனிமொழியும் அதுபற்றிக் கவலைப்பட வில்லை. 'ஒரே ஆள் இதைச் செய்திருக்க முடியுமா?’ என்று கருணாநிதி கேட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியும் இன்னும் பதில் அளிக்கவில்லை.

'பூதத்தை பூனைக் குட்டி விழுங்கிவிட்ட தைப்போல, அனுமானத்தின் அடிப்படையில், அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் முயற்சித்து வருகிறது’ என்று கருணாநிதி பீடிகையை விட்டுத்தராமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார். 'மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் அசையாச் சொத்துக்களைத் திரட்டி வரும் வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தரப்பு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்!’ என்று டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பட்டியல் கிடைத்தால்தான் யார் பூதம், எது பூனைக் குட்டி என்பது முழுமையாக வெளிச்சத்துக்கு வரும்!