Published:Updated:

தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
News
தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு,திமுக தலைவர் கருணாநிதி,பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

" நான் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா” நூலின் முதல் பதிப்பினை தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் அவர்கள் தான் வெளியிட்டார். அப்போது அவர் ஆற்றிய அரிய உரை இன்னமும் என் நினைவிலே உள்ளது. தொல்காப்பியம் இரண்டாம் பதிப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தான் தலைமை தாங்கினார். தமிழறிஞருக்கான மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர் தமிழண்ணல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவரது மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்,

"சாதாரண ஆசிரியராக பணியைத் தொடங்கி தமிழறிஞர் உலகத்தின் தலைமகனாக உயர்ந்தவர். தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணியில் இறுதி மூச்சு வரை செயலாற்றியவர். சங்க இலக்கியம்

தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

முதல் நவீன தமிழ் இலக்கியம் வரையிலான இவரது விமர்சனக் கட்டுரை ஆய்வுலகில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒளிச்சுடராக திகழ்ந்து வரும். தலைசிறந்த தமிழ் ஆய்வாளர்களை உருவாக்கி வழி நடத்தியவர். சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை என பல்வேறு தளங்களிலும் சிறந்த படைப்புகளை வழங்கிவர்.

தமிழ் நாட்டில் மட்டுமல்லாத, பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழ்வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை செலுத்தியவர். அன்னாரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பேரிழிப்பாகும் அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
"தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்கும் பாடுபட்டவர்களில் தமிழண்ணல் மிகவும் முக்கியமானவர். தமிழை கட்டாய பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த

தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

25.04.1998 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமது தலைமையில் 101 தமிழறிஞர்களை திரட்டி சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தியவர்.

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்பதில் உறுதியாக இருந்தவர். தமிழ் ஆராய்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழை வளர்ப்பதற்காக தலைசிறந்த தமிழறிஞர்களை உருவாக்கியவர்.

தமிழறிஞர் தமிழண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.