Published:Updated:

துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு!

துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு!
துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி: துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சகஸ்திர சீமா பால் ஆகியவற்றில் மொத்தம் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.

இந்நிலையில், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குழுவின் 6-வது பரிந்துரை அறிக்கை, துணை ராணுவ படைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவது உடனடி அவசியம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதில், முதல் கட்டமாக படைக் காவலர் தகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீடும், எல்லை பாதுகாப்பு படை, சகஸ்திர சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய எல்லை படை பணிகளுக்கு 15 சதவீத பெண்களும் காவலர்களாக நிரப்பப்படுவார்கள்" என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை, உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.