Published:Updated:

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

கோவை: உட்கட்சி மோதல் காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் துணை மேயரும், தற்போதைய கவுன்சிலருமான சின்னதுரையின் உதவியாளராக இருந்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில், பைக் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. காரின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பற்றாததால் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக குமார்,  செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், " 76-வது வார்டு பகுதி செயலாளார் பெருமாளின் உறவினர் சசிராஜ் மற்றும் பெருமாளுடன் உள்ள மதன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக இந்த செயலை செய்திருக்க கூடும் என சந்தேகிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

கோவை மாநகராட்சி 76வது வார்டு கவுன்சிலரான சின்னதுரைக்கும், 76வது வார்டு பகுதி செயலாளர் பெருமாள் என்பவருக்குமான உட்கட்சி பிரச்னையில், பெருமாளின் ஆட்கள் குமாரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னை என்பதால், இது தொடர்பாக போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்,  கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- ச.ஜெ.ரவி