Published:Updated:

பேரறிவாளனை விடுவிக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் அற்புதம்மாள் மனு!

பேரறிவாளனை விடுவிக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் அற்புதம்மாள் மனு!
பேரறிவாளனை விடுவிக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் அற்புதம்மாள் மனு!
பேரறிவாளனை விடுவிக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் அற்புதம்மாள் மனு!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுவிக்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் இன்று மனு கொடுத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், கடந்த சில மாதங்களாக சிறுநீர்ப்பை தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், அண்மை நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனது மகனின் மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அற்புதம்மாள், தனது மகனை விடுதலை செய்யக் கோரி இன்று ( புதன்கிழமை) முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.

முன்னதாக  ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடிவெடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு, அதற்கான தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அற்புதம்மாள், முதல்வர் ஜெயலலிதாவை அப்போது தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

இருப்பினும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப்படுவதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதால், அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.