Published:Updated:

கருணாநிதிக்கு சோனியா புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி:  திமுக தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.

அப்போது, திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்துக்கும் தன்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என்று சோனியா கேட்டுக்கொண்டார்.

அத்துடன், திமுக கருணாநிதி நலமாக நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துவதாகவும் தன்னிடம் சோனியா காந்தி கூறியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.