Published:Updated:

முதல்வர் ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்தாரா விஜயகாந்த்..!?

Vikatan Correspondent
முதல்வர் ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்தாரா  விஜயகாந்த்..!?
முதல்வர் ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்தாரா விஜயகாந்த்..!?

வேலூர்: வேலூரில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்தாரா  விஜயகாந்த்..!?

வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்களில் தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் தலைவர் விஜயகாந்த், மகளிர் அணி தலைவர் பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் L.K சுதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழர்களின் பரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளான மயிலாட்டம், தப்பாட்டம், மாடு ஆட்டம், நாட்டுபுற பாடல், கரகாட்டம், பள்ளி மானவர்களின் புலியாட்டம் போன்றவை நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்தாரா  விஜயகாந்த்..!?

பின்னர் விஜயகாந்த் பேசுகையில், ''இங்கு நடந்த தப்பாட்டம் நடனத்தை பார்த்து எனக்கு பழைய நினைவுகள் வருகிறது. எனக்கும் ஆடனும் போல தோன்றியது. ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதுவதே பெரிய வேலையாக இருக்கின்றது. இந்த ஆண்டு கண்டிப்பாக  ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கடந்த ஆண்டு ஜெயலலிதா சொன்னார். அதை இப்போது செய்திருக்கிறாரா?

மாடும், குதிரையும் ஒன்று தான். மாட்டுக்கும், குதிரைக்கும் ரேஸ் வைத்தால் இரண்டும் தாவி தாவி போகும். அதேபோல், ஜல்லிக்கட்டின்போது மாடு பிடி வீரர்கள் மாட்டுக்கு கீழே படுத்துக்கொண்டால்கூட மாடு எகிறி போய் விடும்'' என்றவர், முதல்வர் ஜெயலலிதாவை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. (அந்த பேச்சு இங்கே பிரசுரிக்க முடியாத நிலையில் உள்ளது.)

ம.சுமன்
(மாணவப் பத்திரிகையாளர்)