Published:Updated:

இந்திய ராணுவ தினம்! நம்மையும் நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்

Vikatan Correspondent
இந்திய ராணுவ தினம்! நம்மையும் நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்
இந்திய ராணுவ தினம்! நம்மையும் நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்

தாயகம் காக்க தன்னலம் நீங்கி உறவுகளின் பிரிவுகளை ஏற்று வெயில், பனி பாராது ரத்தம் சிந்தி இன்னுயிரையும் தாய் மண்ணிற்காக இழக்கத் துணிந்து இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க இந்தச் சணமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவுகூறும் நாள் ஜனவரி-15. 

இந்திய ராணுவ தினம்! நம்மையும் நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்



1949 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15ம் நாள், இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக திரு.கே.எம்.கரியப்பா பதவியேற்ற நாள். அதற்கு முன்னதாக, சுதந்திரம் பெற்ற பின்னரும் பதவியிலிருந்த பிரிட்டிஷ் அரசின் ‘சர் ஃப்ரான்சிஸ் புட்செரி’ வெளியேர இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டுக்காக குருதி சிந்தி, சொந்த விருப்பு வெறுப்புகளை துச்சமென மதித்து வீரமரணம் எய்தும் உயர்ந்த போக்கினை வெறும் ‘தியாகம்’ என்ற சொல்லில் அடக்கிவிடமுடியாது. தாய் மண்ணில் விதையாகிப் போன சரித்திர நாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவ தினம்! நம்மையும் நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்



உலகின் மூன்றாவது மிகப்பெரிய ராணுவ சக்தியாகத் திகழும் இந்திய ராணுவம் 1.3 மில்லியன்

இந்திய ராணுவ தினம்! நம்மையும் நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்

வீரர்களுடன் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துவருகின்றது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என நாட்டின் முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவரே தலைமைக் கமாண்டராக செயல்படுகிறார்.

உலகில் அதிகமாக ராணுவத் தளவாடங்களுக்கு செலவு செய்யும் நாடு, உலகின் மிகப்பெரிய கடற்படை கொண்ட நாடு, என நாட்டின் அந்தஸ்த்தை காட்டவோ, எதிரிகளின் சிம்மசொப்பனம் இந்திய தேசம் என பறைசாற்றுவதற்கோ இந்தப் பட்டியல் அல்ல. இதையெல்லாம் தாண்டிய பலம், வேற்றுமை மறந்து நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே கருதி போர்களிலும், இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெறும் இந்திய அரசுப் பணியாளனாக அல்லாமல், ஒரு மாவீரனாக தன் தோள்களில் தன் தேசத்தை சுமப்பவனுக்கு, கொண்டாட்டங்களால் அல்ல ஒரு இந்தியக் குடிமகனாக அவனை மனதில் நிறுத்தி நினைவுகூறுவதே மிகப்பெரிய மரியாதை. சகமனிதனுக்குக் கிடைக்கப்பெறும் சாதாரண அடிப்படை சந்தோஷங்களைக் கூட தனக்குள்ளே அழுத்திவைத்துக்கொண்டு  சுற்றம், சூழல் எதையும் பொருட்படுத்தாது, தன்னை மெலுகாக்கி, தேசப்பற்றைத் திரியாக்கி, தியாகச் சுடராக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக நிமிர்ந்து நின்று பெருமிதமாகவே அடிக்கலாம், ஒரு சல்யூட்…!

ராகினி ஆத்ம வெண்டி
மாணவப் பத்திரிக்கையாளர்