Published:Updated:

கனியே விஷம் ஆகலாமா?

கனியே விஷம் ஆகலாமா?

கனியே விஷம் ஆகலாமா?

கனியே விஷம் ஆகலாமா?

Published:Updated:
கனியே விஷம் ஆகலாமா?

ண்ணச் சுவையிலும், ஊட்டச் சத்து வழங்குவதிலும், முக்கனிகளில் முதல் கனியாக இருப்பது மாம்பழம்!

மாம்பழ விரும்பிகளின் ஆர்வத்தை, தங்கள் சுய லாபத்துக்காக மிக மோசமாகப் பயன்படுத்து​கிறார்கள் என்பதுதான் தாங்க முடியாத வேதனை. மொத்தமாக வாங்கும் மாங்காய்கள் பழுக்கும் வரை காத்திருக்க முடியாத அவசரத்தில், 'கால்ஷியம் கார்பைடு’ என்ற விஷக் கற்களைப் பயன்படுத்​துகிறார்கள். இந்தக் கற்களைப் பயன்படுத்துவதால், இரண்டு நாட்களிலேயே பழுத்துவிடும் மாம்பழங்கள், பளபளவென

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஞ்சள் நிறத்தில் மின்னும். ஆனால், சாப்பிட்டால் உணவுக் குழாய் தொற்று நோய் முதல், நரம்பு மண்டலப் பாதிப்பு வரை ஏற்படும். புற்று நோய் போன்ற உயிர்க் கொல்லி நோய்களால் பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இயற்கையாகப் பழுத்த பழத்துக்கும், கல் வைத்துப் பழுத்த பழத்துக்கும் பொது மக்களால் வித்தியாசம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால்தான், வியாபாரிகள் இது போன்ற குறுக்குப் புத்தியைக் கையாளுகிறார்கள். ஏற்கெனவே, காற்று மாசடைந்து, தண்ணீர் பாதிப்படைந்து இருக்கும்போது, பழமும் விஷமாகத்தான் பொது மக்களுக்குக் கிடைக்க வேண்டுமா?

மாம்பழ சீஸன் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில், சுகாதாரத் துறை மிகவும் பொறுப்புடனும் கண்டிப்புடனும் நடக்க வேண்டும். குற்றம் இழைப்போருக்கு அதிகபட்சத் தண்டனை கொடுக்கப்பட்டால்தான், மற்றவர்கள் செய்ய மாட்டார்கள். மாம்பழம் விற்பனை செய்பவர்களும், பொது நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். சிறிய லாபத்துக்கு ஆசைப்பட்டு, மக்களுக்குக் கொடிய நோய்களைக் கொடுத்துவிடாதீர்கள்!

- எம்.முகமது அனீஸ், பனைக்குளம்.

கனியே விஷம் ஆகலாமா?