Published:Updated:

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்

Published:Updated:
##~##

ழுகார் நம் அலுவலகத்துக்கு வந்தபோது சேனல்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கொந்தளிப்புகள் ஃபிளாஷ் செய்தியாக மின்னிக்கொண்டு இருந்தன. 

நமட்டுச் சிரிப்புடன் நம் முன்னே உட்கார்ந்தார் கழுகார். ''சென்னையைவிட டெல்லியில் வெயில் கொதிக்கிறது. அதற்கு இணையாக ஸ்பெக்ட்ரம் அனலும் போட்டி போடுகிறது. கனிமொழி ஆஜராகும் வெள்ளிக்கிழமைதான் வெப்பக் காற்று அடிக்கும் என்று நினைத்தால் வியாழன் அன்றே சூடு பறக்கிறதே!'' என்று பீடிகை போட்டார் கழுகார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வெள்ளிக்கிழமை அன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி கனிமொழி குற்றப்பத்திரிகை வாங்கப் போகிறார். அன்றைய தினமே அவரைக் கைது செய்து விடுவார்கள் என்று என்னுடைய டெல்லி சோர்ஸ் சொல்கிறார். 'இல்லை. 12-ம் தேதி வரை சி.பி.ஐ. அமைதியாகத்தான் இருக்கப் போகிறது. அன்றைய தினம் ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், கனிமொழிக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். வெளிநாட்டில் நடந்த பணப்பரிவர்த்தனைகளை அவர்கள் கேட்டு முடித்த பிறகே கனிமொழி மீது சி.பி.ஐ. கை வைக்கும்’ என்று இன்னொரு சோர்ஸ் சொல்​கிறார். எப்படி என்றாலும் கனிமொழியின் கைது உறுதி. ஆனால் தேதி முடிவாகவில்லை என்பதுதான் இன்றைய நிலவரம். ஆனால்...''

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்

''சொல்லும்!''

''இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. அதாவது வருமான வரித்துறை இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான தகவலைத் திரட்டி வைத்துள்ளது என்பதைப் பற்றிய அறிக்கை தாக்கல் ஆனது. இதைப் பார்த்ததும் நீதிபதிகள் சிங்வீயும் கங்குலியும் கொந்தளித்தார்கள். 'நீங்கள்

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்

மெத்தனமாகச் செயல்படுகிறீர்கள். இது சாதாரண வரி ஏய்ப்பு வழக்கு போன்றது அல்ல. அலட்சியமாக அணுகக்கூடாது’ என்ற நீதிபதிகள், '2ஜி வழக்கில் எவரையும் பாதுகாக்கும் வகையில் செயல்படக்கூடாது’ என்று கறார் காட்டி இருக்கிறார்கள். தயாளு அம்மாளை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் சாட்சியாகப் போட்டதும், கனிமொழியைக் கைது செய்வதில் சி.பி.ஐ. காட்டும் தயக்கமும்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கொந்தளிப்புக்குக் காரணம் என்று வியாக்கியானங்கள் சொல்கிறார்கள் டெல்லியில்.

இதை உணர்ந்து இருக்கும் சி.பி.ஐ. 'நாங்கள் மெத்தனமாக இல்லை. யாரையும் காப்பாற்ற முயலவில்லை’ என்பதைக் காட்டியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. எனவே கைது விஷயத்தில் சி.பி.ஐ. சுணக்கம் காட்டிவிடாமல் இருக்க, உச்ச நீதிமன்றம் தூண்டுதலாக இருந்துவிட்டது என்றும் சொல்​கிறார்கள்!''

'சட்டப்படி சந்திக்கத் தயார்’ என்று ஆங்கிலச் சேனல்​களுக்கு கனிமொழி பேட்டி அளித்துள்ளாரே?

''மகன் ஆதித்யா, கணவர் அரவிந்தன் சகிதமாக புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து டெல்லி போனார், கனிமொழி. அவரை வரவேற்க தி.மு.க. எம்.பி-க்கள் சிலர் டெல்லி விமான நிலைய வி.ஐ.பி-க்கள் நுழைவாயிலில் இருந்தனர். மீடியாக்களும் சுற்றி இருந்தன. எனவே சாதாரணப் பயணிகளுடன் வெளியேறினார் கனிமொழி. அன்று மாலை விமானத்தில் ராஜாத்தி அம்மாளும், அமைச்சர் பூங்கோதையும் டெல்லி போனார்கள். தமிழக உள்துறைச் செயலாளர் ஞானதேசிகனையும்

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்

விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது. போலீஸ் துறை நவீனமயமாக்கல் தொடர்பான மீட்டிங்குக்கு இவர் செல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்றும் ஒரு தரப்பு சொல்கிறது!''

''ராஜாத்தி அம்மாள் எப்படி இருக்கிறார்?''

''அதிகப்படியான பதற்றத்தில் இருப்பது அவர்தான். கனிமொழி முகத்தில்கூட கவலைகள் இல்லை. தமிழ்நாடு இல்லத்தில் அறை எண் 111-ல் தங்கி இருக்கும் ராஜாத்தியை, வரிசையாக அமைச்சர்களும் எம்.பி-க்களும் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் டெல்லியில் இருக்கும் அழகிரி இதுவரை பார்க்கவில்லையாம்!''

''அவர் கோபம் அறிந்ததுதானே?''

''சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலையும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நாராயணசாமியையும், டி.ஆர்.பாலுவும் ஜெகத்ரட்சகனும் சந்தித்தார்களாம். 'எப்படியாவது கைதை தவிர்க்கச் சொல்லுங்கள்’ என்று அகமது படேலிடம் பாலு சொல்லி இருக்கிறார். இதே விஷயத்தை பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகத்தான் நாராயணசாமியைச் சந்தித்தார்களாம். 'மன்மோகன் சிங் இருக்கும் வரை நமக்கு எந்த சலுகையும் கிடைக்காது’ என்று தி.மு.க. தலைமை நினைக்கிறதாம். அந்த அளவுக்கு இறுக்கம் காட்டி வருகிறாராம் மன்மோகன். காங்கிரஸ் தலைமையை நம்புவதைவிட பிரபல வக்கீல்களை நம்பலாம் என்று நினைக்கிறார் கருணாநிதி!''

''ராம்ஜெத்மலானி வருவார் என்கிறார்களே?''

''முதலில் மறுத்துவிட்டார் ராம்ஜெத்மலானி. ஆனால் கருணாநிதியே தொடர்பு கொண்டு பேசியதும்  ஒப்புக் கொண்டாராம். 'சி.பி.ஐ. கோர்ட் என்பது செஷன்ஸ் கோர்ட் மாதிரி அங்கே வந்து நான் ஆஜராக வேண்டுமா? என்னுடைய முழு அறிவுரைப்படி என்னுடைய ஜூனியர் ஆஜராவார்’ என்றாராம். இதைக் கருணாநிதி ஏற்கவில்லை. 'நீங்கள்தான் வரவேண்டும்’ என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் அந்தி அர்ஜுனா என்ற பிரபல வக்கீலை முன்னாள் அமைச்சர் செல்வகணபதி பேசி வைத்துள்ளாராம். இவர்கள் கேட்கும் ஃபீஸை சொன்னால் மூச்சு முட்டி விடும்!''

''1.76 லட்சம் கோடி வழக்கு என்றால் அதற்குத் தகுந்த மாதிரித்தானே வக்கீல் ஃபீஸும் இருக்கும்!''

''இருக்கும்... இருக்கும்!'' என்ற கழுகார் அடுத்த வெடிகுண்டை வீசினார்.

''ஒசாமா பின்லேடன் கொலைக்குப் பின்னால் இந்தியாவின் அடிவயிற்றில் நெருப்பு வைக்கும் விஷயம் கசிந்து இருக்கிறது!'' என்ற கழுகார் அதையும் சொல்ல ஆரம்பித்தார்.

''பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட உலகத்தின் நம்பர் ஒன் பயங்கரவாதி ஒசாமாவின் பின்னணியில் அவனது முழு ஏஜென்ட்டாக தாவூத் இப்ராஹிம் செயல்பட்டு வந்ததை அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சர்வதேச போலீஸாரால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் ஒசாமா. மூன்றாம் இடத்தில் தாவூத் பெயர் இருந்தது. ஒசாமா மறைவுக்குப் பிறகு, தாவூத் தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறார். பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் அரவணைப்பில் தாவூத் குடியிருந்து வருகிறான். இதற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்களை இந்திய அரசு சேகரித்து உலக நாடுகளின் பார்வைக்கு அனுப்பியது. இருந்தும், பாகிஸ்தான் அரசு, 'தாவூத் எங்கள் நாட்டில் இல்லை' என்று திரும்பத்திரும்ப மறுத்துவருகிறது. ஒசாமா கதை முடிந்த இந்த நேரத்தில், அடுத்து தாவூத்தின் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பார்வையை திருப்ப இந்தியா களம் இறங்கி உள்ளது. இந்த வகையில், தாவூத் இப்ராஹிம் மிகப்பெரிய முதலீடுகளை இந்திய ரியல் எஸ்டேட் பிஸினஸில் பினாமிகள் மூலம் போட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் லாபம் பார்க்கும் நோக்கம் இல்லை, வேறு ஏதோ சதி திட்டம் என்று அமெரிக்க சி.ஐ.ஏ. நிறுவனம் கருதுகிறது. தாவூத்தின் பினாமிகள் யார் யார் என்பது இந்திய உளவு நிறுவனமான ஐ.பி. அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் மிகப்பெரிய குட்டி நகரங்களை இவர்கள் அபார்ட்மென்ட்களாக அமைத்து உள்ளனர். அங்கெல்லாம் பல்லாயிரம் பேர் தற்போது குடி இருக்கிறார்கள். இந்த அபார்ட்மென்ட்களின் ஒவ்வொரு செங்கல்லையும் ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று உளவுத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.''

''நீர் சொல்வதைக் கேட்டாலே திகில் அடிக்கிறதே!''

''வருமுன் காப்போம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்!'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!

அட்டை மற்றும் படங்கள்:

கே.ராஜசேகரன், வி.செந்தில்குமார்

மிஸ்டர் கழுகு: மே - 6 கடைசி முயற்சிகள்