Published:Updated:

அண்ணா நினைவு நாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி அஞ்சலி!

அண்ணா நினைவு நாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி அஞ்சலி!
அண்ணா நினைவு நாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி அஞ்சலி!

சென்னை: தமிழக முன்னாள் முதலவர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி தி.மு.க.வினர் அமைதி பேரணி நடத்தினர்.

அண்ணா நினைவு நாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி அஞ்சலி!

பேரறிஞர் அண்ணாவின் 47-வது நினைவு தினத்தை ஒட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் இன்று அமைதி பேரணி நடத்தினர். இந்த பேரணியில், அன்பழகன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் வரை சென்றது.

இதேபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.