Published:Updated:

'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்

'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்
'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்

கும்பகோணம்: "கோயில் நகரமான கும்பகோணத்தில் மகாமகம் வருவதற்குள் நிரந்தரமாக மதுகடைகள் அனைத்தையும் அரசு அகற்ற வேண்டும், இல்லை என்றால் எங்கள் உயிரை தியாகம் செய்யும் அளவுக்கு பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம்" என்று ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள் கூறி வருவதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்

கும்பகோணத்தில், வருகின்ற 13-ம் தேதி மகாமகம் பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக  அரசு தீவிரமாக பல பணிகளை செய்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகளை அகற்றுவது  தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டும் இல்லாமல், கோயிலின் புனிதம் கெடும் வகையில் அதன் அருகிலேயே பல டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது.

'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்

இதை அகற்றக் கோரி அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்நிலையில், "மகாமகம் பெருவிழா தொடங்குவதற்குள் கும்பகோணம் பகுதியில் நிரந்தரமாக மது கடைகளை அகற்ற, ஆளும் அ.தி.மு.க. அரசு உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் உயிர் போகும் அளவுக்கு போரட்டங்களை நடத்துவோம்" என்று கூறி அதற்கான ஏற்பாட்டையும் செய்து வருகிறார்கள் ஜோதிமலை இறைபணி திருகூட்டத்தை சேர்ந்தவர்கள்.

'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்

இது குறித்து அதன் நிறுவனர் திருவடிகுடில் சுவாமிகள் நம்மிடம் கூறும்போது, ''புனித பூமியான கும்பகோணத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற  வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நாங்கள் நடத்தி வந்துள்ளோம். நான்கு வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த கொடூரத்தை தமிழக மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது போல் போஸ்டர் அடித்து எங்கள் எதிர்ப்பை காண்பித்தோம்.

'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்

சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டதொடரில் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தமிழகத்தில் கோயில்களுக்கு அருகில் மது கடைகளே இல்லை என்றும், அப்படி இருந்தால் அது குறித்து புகார் வந்தால் உடனே அந்த மது கடை அகற்றப்படும் என்றும் பச்சையான பொய்யை பயப்படாமல் பேசியுள்ளார். கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயில், ராமசுவாமி கோவில், படைவெட்டி மாரியம்மன் கோயில், மகாமகம் குளக்கரை அருகே என முக்கிய கோயில்களுக்கு அருகில் டாஸ்மாக கடைகள் பல ஆண்டுகளாக உள்ளது.

'பச்சை பொய்யை பயப்படாமல் சொல்கிறார் அமைச்சர் விசுவநாதன்!' -கொதிக்கும் பக்தர்கள்

அந்த கடைகளை எடுக்க சொல்லி பல போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகாமகம் விழாவின்போது சாமி புறப்பாடு நடக்கும் நான்கு வீதிகளிலும் மது கடைகள் இருக்கிறது. ஆனால், அமைச்சர் கோயில்களுக்கு அருகில் மது கடைகள் இல்லை என்கிறார்.

ரிஷிகேஷ், தர்மசாலா போன்ற ஆன்மீக தலங்களில் மது விற்பனைகள் கிடையாது. தென்னகத்து கும்பமேளா என்று சொல்லப்படும் மகாமகம் நடக்கும் கும்பகோணத்தில் மட்டும் காவிரியை தாண்டி மது ஆறு ஒடுகிறது. நாங்கள் மகாமகத்துக்குள் கோயில்களுக்கு அருகில் உள்ள மது கடைகளை நிரந்தரமாக எடுக்க வேண்டும் என்கிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் ஒப்புகொள்ளவில்லை.

கோயில்களையும் அதன் புனிதத்தையும் காப்பதற்காக நம் முன்னோர்கள் உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் என வரலாறு சொல்கிறது. மனித உயிர்கள் பலியானால்தான் இந்த அரசு டாஸ்மாக் கடைகளை எடுக்கும் என்றால், எங்கள் உயிரை தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதனால், மகாமகம் தொடங்க இருக்கின்ற 13-ம் தேதிக்குள் கும்பகோணத்தில் நிரந்தரமாக மதுகடைகளை அரசு அகற்ற உத்தரவிட வேண்டும். தவறினால், விழா தொடக்கத்தின்போது ஆன்மீக அன்பர்களை திரட்டி எங்கள் உயிர் போகும் வரை போரட்டம் நடத்த தயாராகி வருகிறோம்" என்றார் ஆவேசமாக.

இவர்களின் கோரிக்கையை ஏற்று மகாமகத்திற்குள் கும்பகோணத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அரசு அகற்றுமா?

செய்தி, படங்கள்: கே.குணசீலன்