Published:Updated:

புயல் நிவாரணம்: மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்- கருணாநிதி

Vikatan Correspondent
புயல் நிவாரணம்: மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்- கருணாநிதி
புயல் நிவாரணம்: மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்- கருணாநிதி
புயல் நிவாரணம்: மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்- கருணாநிதி

சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான நிதியுதவியை வழங்குமாறு மத்திய அரசை தாம் வலியுறுத்தவுள்ளதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.  

அண்மையில் தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னையில் காரில் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன், திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு உள்ளிட்டோரும் சென்றனர்.

முன்னதாக, சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில், "தமிழக அரசின் நிவாரணப் பணிகள் குறித்து மக்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.

மாநில அரசுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குமாறு மத்திய அரசை திமுக வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளும்," என்றார் கருணாநிதி.

பின்னர், புதுச்சேரியில் புயல் சேதங்களை பார்வையிட்ட அவர், "புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்," என்று அறிவித்தார்.