Published:Updated:

திருக்கோயில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.3,500 ஊதிய உயர்வு

திருக்கோயில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.3,500 ஊதிய உயர்வு
திருக்கோயில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.3,500 ஊதிய உயர்வு

திருக்கோயில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.3,500 ஊதிய உயர்வு

திருக்கோயில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.3,500 ஊதிய உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியத்தை 1500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கோயில்களில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 1992-ஆம் ஆண்டு திருக்கோயில்களிலுள்ள சிலைகள், நகைகள், உண்டியல் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு 1,000 இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் 3,000 முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட "திருக்கோயில் பாதுகாப்பு படை" என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

இப்பாதுகாப்பு படையில் பணியாற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 2001 ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியமாக 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  

திருக்கோயில் பாதுகாப்பு படையில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ஆற்றும் பணிகளின் தன்மை மற்றும் தற்போது நிலவி வரும் விலைவாசி சூழலை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 1,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோயில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் முன்னாள் ராணுவத்தினர் இதன் மூலம் மிகுந்த பயன் அடைவார்கள் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு