Published:Updated:

அம்மாவின் ஆணைப்படி 92 வயது எம்.ஜி.ஆர். ரசிகைக்கு உதவித்தொகை!

Vikatan Correspondent
அம்மாவின் ஆணைப்படி 92 வயது எம்.ஜி.ஆர். ரசிகைக்கு உதவித்தொகை!
அம்மாவின் ஆணைப்படி 92 வயது எம்.ஜி.ஆர். ரசிகைக்கு உதவித்தொகை!
அம்மாவின் ஆணைப்படி 92 வயது எம்.ஜி.ஆர். ரசிகைக்கு உதவித்தொகை!

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி,  எம்ஜிஆரின் தீவிர ரசிகையான 92 வயது மூதாட்டிக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலம்மா (92). தீப்பெட்டி தொழிலாளியான இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளன. கணவர் இறந்து விட்ட நிலையில், பிள்ளைகளும் கவனிக்காத நிலையில் தனி மரமாக தீபெட்டி ஒட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

தீவிர எம்ஜிஆர் ரசிகையான இவரின் ஏழ்மை குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு,  பாலம்மாவிற்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் சிவகாசி அம்மன் கோவில்பட்டியில் உள்ள பாலம்மாவின் வீட்டிற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பாலம்மாவிற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,  தனது சொந்த பணம் 50 ஆயிரம் கொடுத்து நிதி உதவி செய்தார். மேலும் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும் பாலம்மாவிடம் அமைச்சர் வழங்கினார். நிதி உதவி மற்று முதியோர் உதவிதொகை பெற்றுக்கொண்ட பாலம்மாள், தமிழக முதல்வர் அம்மாவிற்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.