Published:Updated:

'நீ ஒரு போராளி': விஜயதாரணி எம்எல்ஏவை பாராட்டிய சோனியா!

'நீ ஒரு போராளி': விஜயதாரணி எம்எல்ஏவை பாராட்டிய சோனியா!
'நீ ஒரு போராளி': விஜயதாரணி எம்எல்ஏவை பாராட்டிய சோனியா!

புதுடெல்லி: 'நீ ஒரு போராளி'  என சோனியா காந்தி பாராட்டியதையடுத்து, மனம் நெகிழ்ந்த விஜயதாரணி எம்.எல்.ஏ. நல்ல பதிலுக்காக காத்திருக்கிறார்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கடந்த மாதம் 22-ம் தேதி,  காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த பொன்னம்மாளின் பேத்தி எம்.ஜான்சி ராணி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.

'நீ ஒரு போராளி': விஜயதாரணி எம்எல்ஏவை பாராட்டிய சோனியா!

இதையடுத்து கடந்த 3-ம் தேதி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை, விஜயதாரணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அதன்பின்னர், ''நான் காங்கிரசில் இருந்து விலக மாட்டேன். கட்சி தலைமையின் ஆதரவு எனக்கு இருக்கிறது'' என பேட்டியளித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நேற்று (9-ம் தேதி) விஜயதாரணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், அது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் சோனியாவிடம் விளக்கியதோடு, தனது தொகுதியான விளவங்கோட்டில் தான் செய்த பணிகள் குறித்த புகைப்படத்தையும் விஜயதாரணி காண்பித்தாராம்.

இதையடுத்து சோனியா, ''நீ ஒரு போராளி. நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். ராகுல்காந்தியுடன் பேசி நல்ல முடிவு எடுக்கிறேன். அதுவரை தொகுதி பணியை கவனி'' என்று கூறினாராம்.

சோனியா காந்தி பாராட்டியதால் நெகிழ்ச்சி அடைந்த விஜயதாரணி எம்.எல்.ஏ., நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.