Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

மின்வெட்டால் தமிழகம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அளவே இல்லை. 'பராமரிப்புப் பணி காரணமாக மின்சாரத்தை நிறுத்திவைத்துள்ளோம்’ என்று பூசி மெழுகிச் சமாளிக்கும் மின் வாரியத்துக்கு, துணிச்சல் கூடிவிட்டது. 'இதுவரை இரண்டு மணி நேரம் இருந்த மின் வெட்டு, இனி மூன்று மணி நேரம் அமல்படுத்தப்படும்!’ என்று வெளிப்படையாகவே அறிவிக்கும் அளவுக்கு முன்னேற்றம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கொடுக்கிற துன்பத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியதுதானே... சென்னையைவிட எங்களுக்கு மட்டும் ஏன் கூடுதல் மின் வெட்டு?' என்று கோவையில் சுமார் இருபதாயிரம் பேர் ஒன்று திரண்டு போராடினர். பதிலுக்கு, சென்னையை ஒட்டிய தொழிற்சாலைகளோ, 'எங்களுக்கு சொல்லிவிட்டு நிறுத்துவது ஒரு மணி நேரம்... சொல்லாமல் நிறுத்துவது நான்கு மணி நேரம். மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் நாங்கள்தான் அதிகம் அல்லல்படுகிறோம்!’ என்று கொந்தளிக்கின்றன. எங்கே, யாருக்கு பாதிப்பு அதிகம் என்று தொலைக்காட்சியில் பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால், அதைப் பார்ப்பதற்கும் மின்சாரம் வேண்டுமே!

''உங்களால் போதிய மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியவில்லை என்றால், அண்டை மாநிலங்களில் இருந்து நாங்களே வாங்கி உபயோகப்படுத்துவதில் உள்ள தடைகளையாவது அகற்றுங் களேன்!'' என்று அரசாங்கத்தை நோக்கி மிக நியாயமான ஒரு மன்றாடலை முன்வைத்துள்ளது தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கம். காது கொடுத்துக் கேட்கத் தான் ஆள் இல்லை.

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியாருக்கும் ஆயிரம் பிடுங்கல்கள். அவர்களுக்கு ஆதரவு அளித்து மின் பற்றாக் குறையைச் சமாளிப்பதற்குப் பதிலாக, தன்னால் முடிந்த தடங்கல்களை மின் வாரியம் ஏற்படுத்துவதாகவும் வேதனைக் குரல்கள் எழுகின்றன. 'போன ஆட்சியின் மோசமான திட்டமிடல்தான் இப்போதைய பற்றாக்குறைக்குக் காரணம்!' என்பது காலம் காலமாக ஆளும் அரசுகள் கையில் எடுக்கும் சமாளிப்புத் தந்திரம். இதோ, தேர்தல் முடிவு வெளியாகி, மறுபடி ஓர் அரசு அமையப்போகிறது.  

'எங்களுக்கு வாக்களித்தால், உங்கள் வீட்டுக்கு விளக்கேற்றிவைப்போம்!' என்று இரு தரப்பிலுமே அளித்தார்களே விதவிதமான வாக்குறுதி... மின் பற்றாக்குறையைச் சீர் செய்து எப்படி விளக்கேற்றிவைக்கிறார்கள் என்று பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism