Published:Updated:

'அன்று நடந்தது துரதிருஷ்டவசமானது'... கன்ஹையா குமாரின் உருக்க கடிதம்!

'அன்று நடந்தது துரதிருஷ்டவசமானது'... கன்ஹையா குமாரின் உருக்க கடிதம்!
'அன்று நடந்தது துரதிருஷ்டவசமானது'... கன்ஹையா குமாரின் உருக்க கடிதம்!

புதுடெல்லி: "ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்தது துரதிருஷ்டவசமானது. அந்த சம்பவத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு கிடையாது. அதை நான் எதிர்க்கிறேன்" என்று கைதாகி உள்ள மாணவர் சங்க தலைவர் கன்ஹையா  குமார் டெல்லி போலீசிடம் ஒரு கடிதம் அளித்துள்ளார்.

'அன்று நடந்தது துரதிருஷ்டவசமானது'... கன்ஹையா குமாரின் உருக்க கடிதம்!

நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதின் நினைவு நாளின்போது, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஆதரவாகவும், நாட்டுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார், டெல்லி போலீசிடம் நேற்று தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை அளித்தார்.

'அன்று நடந்தது துரதிருஷ்டவசமானது'... கன்ஹையா குமாரின் உருக்க கடிதம்!

அந்த கடிதத்தில், ''எனது பெயர் கன்ஹையா குமார். என் தாயார் பெயர் மீனா தேவி. தந்தையார் பெயர் ஜெய்சங்கர் சிங். நான் பீகார் மாநிலத்தின் பேகுசராய் மாவட்டத்தை சேர்ந்தவன். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு ஆய்வு நிறுவனத்தில்,  தென் ஆப்பிரிக்காவில் சமூக மாற்றம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இது என்னுடைய ஆய்வு படிப்பின் மூன்றாம் ஆண்டு ஆகும்.

'அன்று நடந்தது துரதிருஷ்டவசமானது'... கன்ஹையா குமாரின் உருக்க கடிதம்!

நான் இந்தியாவின் இறையாண்மையில் முற்றிலும் நம்பிக்கை வைத்துள்ளேன். அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கனவு. நான் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளேன். இதற்கு எதிராக எந்த செயலிலும் நான் ஈடுபட்டது இல்லை.

பிப்ரவரி 9–ம் தேதி எங்கள் பல்கலைக்கழகத்தில் துரதிருஷ்டவசமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த சம்பவத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு கிடையாது. அதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்த வீடியோ பதிவுகளை பார்த்த பிறகு எங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு சில மாணவர்கள் மற்றும் வெளியில் இருந்து வந்த சிலர் தேசவிரோதமான கோஷங்களை எழுப்புவதை கண்டேன்.

இந்த தேசத்தின் இறையாண்மையில் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அந்த கோஷங்களை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். மேலும் நான் அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள், இந்த நாட்டில், சமூகம் மற்றும் பல்கலைக்கழகங்களில் அமைதிக்கு எந்த வகையிலும் களங்கம் விளைவிக்காதீர்கள்" என்று கூறி உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு